Share
skip to main | skip to sidebar
  • நான்
  • 2
  • Labels

நான்

My Photo
சீனு
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

Labels

  • கவிதை (4)
  • துணுக்குகள் (2)
  • மதம் (2)
  • கதை (1)
  • கார்ட்டூன் (1)
  • தீபாவளி (1)
  • பேட்டி (1)
  • பொதுவானவை (1)

விகடனில் நான்...

Facebook Badge

Alumni.Net - Bringing School Friends Together

ஃபாலோ மீ...

'Sweet' Messaging Service

பழைய சோறு

  • ►  2008 (2)
    • ►  October (1)
    • ►  March (1)
  • ►  2007 (1)
    • ►  September (1)
  • ▼  2006 (2)
    • ►  November (1)
    • ▼  May (1)
      • தேவதைகளின் தேவதை - தபூ சங்கர்
  • ►  2005 (5)
    • ►  September (1)
    • ►  April (3)
    • ►  March (1)
  • ►  2004 (4)
    • ►  October (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  May (1)

விலைவாசி...

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?

விகடனில் நான்...

  • ஒரு நிமிடக் கதை
  • நீங்கள் சென்னைவாசியாக சில உபயோக டிப்ஸ்!
  • சென்னைவாசிகளே...! பார்த்து போங்கப்பா...!!

Vb.net - p2p - Seenu

  • http://www.scribd.com/doc/7502371/Vbnet-p2p-Seenu
Visit blogadda.com to discover Indian blogs
கட், காபி, பேஸ்ட்...

Friday, May 12, 2006

தேவதைகளின் தேவதை - தபூ சங்கர்



நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்த்ததும்...

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது






நான் வழிபட

இந்த உலகத்தில்

எத்தனையோ கடவுள்கள்

இருக்கிறார்கள்.



நான் பின்பற்ற

இந்த உலகத்தில்

எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.



ஆனால்,

நான் காதலிக்க

இந்த உலகத்தில்

நீ மட்டும்தான் இருக்கிறாய்.




முனிவர்கள்

கடவுளைப் பார்ப்பதற்காகத்

தவம் இருக்கிறார்கள்.



நானோ,

ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு

தவம் இருக்கிறேன்




சிந்திய மழை

மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை

ஆனால்,

ஒவ்வொரு முறையும்

நீ சிந்தும் வெட்கமெல்லாம்

மீண்டும்

உன் கன்னத்துக்குள்ளேயே

போய்விடுகிறதே.




உன் பெயரில் உள்ள

இரண்டு எழுத்துக்களைத் தவிர

தமிழில் மிச்சமுள்ள

245 எழுத்துக்களும்

தினமும் புலம்புகின்றன.

'உனக்கு யார்

இரண்டெழுத்தில் பெயர் வைத்தது' என்று.




'நிலா ஏன்

தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?'

நீ அடிக்கடி

'நேரமாயிடுச்சு போகணும்' என்று

உன் வீட்டுக்குப்

போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவா

அதனால்தான்.






தான் வரைந்த ஓவியத்தை

கடைசியாக ஒரு முறை

சரி செய்யும் ஓவியன் போல

நீ ஒவ்வொரு முறையும்

உன் உடையைச் சரி சய்கிறாய்.






காற்றோடு விளையாடிக்

கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை

இழுத்து

நீ இடுப்பில்

செருகிக்கொண்டாய்

அவ்வளவுதான்...

நின்றுவிட்டது காற்று.




தொலைபேசியில்

நீ எனக்குத்தானே 'குட்நைட்'

சொன்னாய்.

ஆனால் இந்த இரவோ

அதைத்தான் நீ 'நல்ல இரவு'

என்று

சொல்லிவிட்டதாக நினைத்து

விடியவே மாட்டேன் என்று அடம்

பிடிக்கிறதே.




என்னை ஒரு

குடுகுடுப்பைக்காரனாய்

நினைத்துக்கொண்டு

ஓர் அதிகாலையில்

உன் வீட்டு முன் நின்று

'இந்த வீட்டில் ஒரு தேவதை

வாழ்கிறது'

என்று கத்திவிட்டு

குடுகுடுவென

நான் ஓடிவந்திருக்கிறேன்.




நான்

உன்னைக் காதலிக்கிறேன்

என்பதற்காக

நீயும் என்னைக்

காதலித்துவிடாதே!

என் கொடிய காதலை

உன் பிஞ்சு இதயத்தால்

தாங்க முடியாது




மழை வந்து

நின்ற பிறகும்

செடிகள் வைத்திருக்கும்

மழைத்துளிகளைப் போல

என் அறை வைத்திருக்கிறது

நீ வந்து போன பிறகும்

உன்னை.






எல்லா தெய்வங்களும்

தங்களைக் குளிப்பாட்டிவிட

பூசாரி வைத்திருக்கும்போது

நீ மட்டும் ஏன்

நீயே குளித்துக்கொள்கிறாய்?






புத்தர் இந்த உலகத்தில்

தோன்றி

ஒரு மார்க்கத்தைத்தான்

அமைத்தார்.

நீயோ என் எதிரில் தோன்றி

எனக்கொரு உலகத்தையே

அமைத்தாய்.




அன்று

நீ குடை விரித்ததற்காகக்

கோபித்துக்கொண்டு

நின்றுவிட்ட மழையைப்

பார்த்தவனாகையால்

இன்று

சட்டென்று மழை நின்றால்

நீ எங்கோ குடை விரிப்பதாகவே

நினைத்துக் கொள்கிறேன்.






உன்னைப் பார்த்தால்

எடை பார்க்கும் இயந்திரம்கூட

கவிதை எழுத

ஆரம்பித்துவிடும் போல.

உன் எடையை அடிக்கவேண்டிய

இடத்தில்

'அழகு நீங்களாக 50 கிலோ' என்று

அடித்திருப்பதைப் பார்!






'அமாவாசை அன்றுதான்

தீபாவளி வரும் என்பதால்

உங்கள் வீட்டுக்குத் தீபாவளி

வரவே வராது' என்றேன்.

அர்த்தம் புரியாமல்

'ஏன்' என்றாய்.

'உங்கள் வீட்டில்தான்

எப்போதும் பெளர்ணமியாக

நீ இருக்கிறாயே' என்றேன்.

'ஆரம்பிச்சிட்டீங்களா' என்று

நீ ஆரம்பித்தாய்

வெட்கப்பட...




உனக்கு வாங்கி வந்த

நகையைப் பார்த்து

'அய்...எனக்கா இந்த நகை'

என்று கத்தினாய்.

நகையோ,

'அய்...எனக்கா இந்தச் சிலை'

என்று கத்தியது.




கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்

கத்திவிட்டன

கடல் அலைகள்...

'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே

விட்டோமா

நிலவை!' என்று.




இந்தா என் இதயம்.

விளையாடும்வரை

விளையாடிவிட்டுத்

தூக்கிப் போட்டுவிடு.

அது அதற்குத்தான்

படைக்கப்பட்டது!




ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னை காட்டி

என்னிடம் கேட்கிறது...



'ஏன் இந்தப் பூ

நகர்ந்துகொண்டே

இருக்கிறது?' என்று!




உன் பிறந்த நாளையும்

பிறந்த நேரத்தையும்

காட்டுகிற ஒரு கடிகாரம்

என் அறையிலிருக்கிறது.



'கடிகாரம் ஓடலியா?'-என

யாராவது கேட்டால்

சிரிப்புத்தான் வரும்



அது காலக் கடிகாரம் அல்ல

என் காதல் கடிகாரம்!




அற்புதமான காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம் சொல்ல முடியாத

அதி அற்புதமான மெளனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.




உன்னிடம்

என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக

எப்போதும் புலம்பியதில்லை நான்.

எனக்குள் இருந்த இதயத்தைக்

கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்




அடிக்கிற கைகள் எல்லாம்

அணைக்குமா என்பது தெரியாது.

ஆனால், நீ அடிப்பதே

அணைப்பது மாதிரிதான்

இருக்கிறது.




கண்ணாடித் தொட்டியில்

நான் வளர்க்கும் மீன்கள்,

உன் மீது புகார் வாசிக்கின்றன...

'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்

ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.






பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக.

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்?






'என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று

விடுகிறாய்?' என்றா

கேட்கிறாய்.



நீ கூடத்தான்

கண்ணாடியை எங்கு

பார்த்தாலும்

ஒரு நொடி நின்று விடுகிறாய்.



உன்னைப் பார்க்க உனக்கே

அவ்வளவு ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளாவு இருக்கும்!




உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்

'தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்' என்று

ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே.




சீப்பெடுத்து

உன் கூந்தலைச் சீவி

அலங்கரித்துக்கொண்டாய்.

அந்தச் சீப்போ

உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து

தன்னை அலங்கரித்துக்கொண்டது.




நீ முகம் கழுவுகையில்

ஓடிய தண்ணீரைப் பார்த்துத்

திடுக்கிட்டுவிட்டேன் நான்.

ஒவ்வொரு நாளும்

அவ்வளவு அழகையா

வேண்டாமென்று

நீ நீரில் விடுகிறாய்.




நீ உன் முகத்தில்

வந்து விழும் முடிகளை

ஒதுக்கிவிடும் போதெல்லாம்

உன் அழகு முகத்தை

ஆழையோடு பார்க்க வந்த

முடிகளை ஒதுக்காதே என்று

தடுக்க நினைப்பேன்.

ஆனால் நீ முடிகளை

ஒதுக்கிவிடுகிற

அழகைப் பார்த்ததும்

சிலையாக நின்று விடுகிறேன்.






திருவிழா அன்று

கோவிலில் எல்லோருக்கும்

கஞ்சி ஊற்றிக்

கொண்டிருந்தாய்.

அடடா...

எல்லா ஊர்களிலும்

அம்மனுக்குக்

கஞ்சி ஊற்றுவார்கள்.

அங்கள் ஊரில்

அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!






யாராவது

ஏதாவது

அதிர்சியான

செய்தி சொன்னால்

'அச்சச்சோ' என்று

நீ நெஞ்சில் கைவைத்துக்

கொள்வாய்.

நான் அதிர்ச்சி

அடைந்துவிடுவேன்!




நீ ஒரு கடி கடித்துவிட்ட

பழத்தைக் கேட்டேன்.

'எச்சில்...துடைத்துத் தருகிறேன்'

என்றாய் புரியாமல்.

'வேண்டாம்...வேண்டாம்...

நீ துடைத்துத்தான் தருவாய் என்றால்

பழத்தைத் துடைத்துவிட்டு

அச்சிலை மட்டும் தா!'




நீ ஆற்றில் குளிப்பதை

நிறுத்திவிட்டு

வீட்டுக்குள் குளியலறை கட்டிக்

குளிக்க ஆரம்பித்தாய்.

வறண்டு போனது

ஆறு.




எதற்காக

நீ கஷ்டப்பட்டுக் கோலம்

போடுகிறாய்...?



பேசாமல்

வாசலிலேயே

சிறிது நேரம் உட்கார்ந்திரு.

போதும்!






உனக்கு திருஷ்டி சுற்றி

வாசலில் உடைந்த பூசணிக்காய்

நன்றி சொன்னது...

உன் அழகு முகத்தை

மூன்று முறை

சுற்றிக் காட்டியதற்காக.






உலகிலேயே

அழகான

ஒன்றையொன்று ஒருபோதும்

பிரியாத

லவ் பேர்ட்ஸ்

உனது மார்புகள்.




நீ எந்த உடை அணிந்தாலும்

உன்னால்

உன்னைத்தான் மறைக்க முடியுமே ஒழிய

உன் அழகை மறைக்க முடியாது.




கர்ப்பக் கிரகம்

தன்னைத்தானே

அபிஷேகம் செய்து

கொள்ளுமா?



நீ சொம்பில் நீரெடுத்துத்

தலையில் ஊற்றிக்

குளித்ததைப்

பார்த்ததிலிருந்து

இப்படித்தான்

கேட்டுக்கொண்டிருக்கிறேன்

என்னை நானே!




உன் பிறந்தநாளைப் பார்த்து

மற்ற நாட்கள்

புலம்பிக் கொண்டு இருக்கின்றன...

பிறந்திருந்தால்

உன் பிறந்த நாளாஅய்ப்

பிறந்திருக்க வேண்டும் என்று.



Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

தேவதைகளின் தேவதை - தபூ சங்கர்

Posted by சீனு at 5/12/2006 08:50:00 PM
Labels: கவிதை

40 comments:

Chandravathanaa said...

nice kavithaikal

5/15/2006 06:00:00 PM
Anonymous said...

அருமையான காதல் கவிதைகள்.
தொடரட்டும் 'தபூசங்கர்' பதிவுகள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

5/24/2006 12:41:00 PM
சீனு said...

நன்றி துபாய் ராசா.

5/24/2006 01:18:00 PM
Jeyapalan said...

எனக்கு இட்ட பின்னூட்டலின் தொடுப்பில் வந்து பார்த்தேன். இந்தக் காதல் கவிதைகளைப் பார்த்து அசந்து விட்டேன்.
காதலை விடக் காதலியைப் புகழ்வதே அதிகமாகக் கூறும் கவிதைகள்.
அருமை.

5/30/2006 08:40:00 PM
சீனு said...

நன்றி ஜெயபால்.

5/30/2006 08:56:00 PM
Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஆஹா..காதல் ..காதல்..

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்கவிதை அல்ல..ல்ல..ல..
அதையும் தாண்டி தேவதையானது..யானது..னது..து..

5/30/2006 09:04:00 PM
Prasanna said...

தபூ சங்கர் காதலித்ததே இல்லை என்று கூறினால் நம்ப முடியுமா..
கவிஞர் நா.முத்துகுமார் இந்த புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையும் அருமையாக இருக்கும்..
பிரசன்னா.
அப்போ அப்போ இந்த கவிதைகளை நான் சுடுறது உண்டு, இப்படி கவுத்துட்டீங்களே தல, பரவாயில்லை "திமிருக்கும் அழகென்று பேர்"ல இருந்து சுட்டுக்குறேன்

5/30/2006 10:14:00 PM
சீனு said...

நன்றி நிலவு நன்பன், பிரசன்னா.

இந்த புத்தகத்தில் இருக்கும் உரைநடைகளும் அருமையாக இருக்கும். Sample இங்கே. ஆனால், எல்லாவற்றையும் தட்டச்சு செய்ய இயலவில்லை.

தபூசங்கர், தன்னைப் பற்றி சொல்லும்பொழுது இப்படிச் சொல்வார்.
"காதல் என்றால் என்னவென்று அறிந்துகொள்ள பிறந்திருக்கிறேன். தெரிந்ததும் இறந்து விடுவேன்" என்று.

5/30/2006 10:39:00 PM
கார்த்திக் பிரபு said...

hi i m having this poems as a ebook ..if any one wants pls contact me

6/27/2006 05:56:00 PM
சீனு said...

//hi i m having this poems as a ebook ..if any one wants pls contact me //

யாரு வேண்டாம்னு சொல்லுவாங்க. haiseenu2000@yahoo.com-க்கு அனுப்புங்க!!!

6/27/2006 07:02:00 PM
Radha N said...

super!!!!

6/27/2006 07:14:00 PM
வெற்றி said...

சீனு,
அருமையான கவிதைகள்.
மிக்க நன்றி

6/29/2006 01:44:00 AM
Anonymous said...

Nalla kavithaikal,ankalai serrika vaithathardkuu ..nandri..paaratukal
maalum thodaratum payanam..

eppadikku
Tamil-paul
Bright-sharif
cool-giri

7/27/2006 03:02:00 AM
கவிதா | Kavitha said...

சீனு, யார்கிட்டையாவது மாட்டிக்கிட்டீங்களா ?! கவிதை நல்லா இருக்கு...ஆனா ஏன் திடீர்னு சீனு இப்படி பதிப்பு போட்டார்னு தான் தெரியல..

7/28/2006 02:47:00 PM
சீனு said...

//சீனு, யார்கிட்டையாவது மாட்டிக்கிட்டீங்களா//
கவிதா, ஆ.நி. எழுதிட்டு இப்படி மாட்டிக்கிட்டீங்களா-ன்னு கேக்கரீங்களே? (என்னது, இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையா? அதப் பத்தி எல்லாம் கவலை இல்லை)

//ஆனா ஏன் திடீர்னு சீனு இப்படி பதிப்பு போட்டார்னு தான் தெரியல//
ஆஹா, ஊரு ஒன்னு கூடிட்டாய்ங்கப்பா...இந்தப் பதிவு போட்டு பல நாட்களாயிடுச்சு தெரியுமா?

7/28/2006 06:31:00 PM
கவிதா | Kavitha said...

//ஆஹா, ஊரு ஒன்னு கூடிட்டாய்ங்கப்பா...இந்தப் பதிவு போட்டு பல நாட்களாயிடுச்சு தெரியுமா? //

எத்தன நாள் ஆனா என்ன?.. எங்க கண்ணுல எப்ப படுதோ அப்பதான் பாப்போம்..கேப்போம்..விடமாட்டோம் இல்ல..

7/29/2006 11:30:00 AM
சீனு said...

//எங்க கண்ணுல எப்ப படுதோ அப்பதான் பாப்போம்..கேப்போம்..விடமாட்டோம் இல்ல.. //
அப்போ அது கண்ணு இல்ல, Gun.

7/31/2006 10:28:00 AM
ALIF AHAMED said...

//
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்...?

பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு.
போதும்!
//

சூப்பராதான் இருக்கு

8/02/2006 04:39:00 PM
Santhosh said...

நல்ல கவிதைகள் சீனு.

//hi i m having this poems as a ebook ..if any one wants pls contact me //

யாரு வேண்டாம்னு சொல்லுவாங்க. haiseenu2000@yahoo.com-க்கு அனுப்புங்க!!!

எனக்கும் ஒரு காபி sjsanthose@gmail.com. உங்க கிட்ட இருக்கா சீனு?

9/05/2006 05:10:00 AM
சீனு said...

நன்றி சந்தோஷ்,
//எனக்கும் ஒரு காபி sjsanthose@gmail.com. உங்க கிட்ட இருக்கா சீனு? //
போட்டாச்சு...போட்டாச்சு... ;)

9/05/2006 06:14:00 PM
thiru said...

நல்ல கவிதைகள்! எனக்கும் மின்புத்தகம் அனுப்புவீர்களா? thiru_kk@rediffmail.com

9/05/2006 06:31:00 PM
சீனு said...

அனுப்பிவிட்டேன் திரு.

9/29/2006 10:25:00 PM
Anonymous said...

Supper...

Can i also get an ebook please? send it to danika1985@hotmail.com.
Thank you!

Hope to see more of your writings!!! Amazing.. imagination or the fact, it feels so good to read.

10/19/2006 08:26:00 PM
Anonymous said...

Supper...

Can i also get an ebook please? send it to danika1985@hotmail.com.
Thank you!

Hope to see more of your writings!!! Amazing.. imagination or the fact, it feels so good to read.

10/19/2006 08:26:00 PM
BadNewsIndia said...

அட்டகாசமான அழகுக் கவிதைகள்.

தொடரட்டும் சீனு.

11/15/2006 10:26:00 AM
Anonymous said...

Can u please send me the e-book @ killivalavan_k@rediffmail.com.
thanks.

12/16/2006 09:43:00 AM
Anonymous said...

ரொம்ப நல்ல கவிதை வரிகள்....வாழ்த்துக்கள்...

எனக்கும் ஒருcopy please...

niceboys2007@hotmail.com

1/28/2007 05:01:00 AM
Unknown said...

அசத்தல் சீனு.. தபூ சங்கர் ரசிகரா நீங்களும்?

1/29/2007 11:21:00 AM
சீனு said...

//அசத்தல் சீனு.. தபூ சங்கர் ரசிகரா நீங்களும்?//
அட! அப்ப நீங்களுமா!!

1/29/2007 11:58:00 AM
MyFriend said...

நீங்க உங்க ப்ராக்ராம்மிங்(programming) அறிவை சோதிக்கத்தானே இந்த கோட் (code)எழுதுனீங்க? அதான், இன்ஃபினிட் லூப் (infinite loop) வருது.. ;-)

2/03/2007 05:16:00 PM
சீனு said...
This comment has been removed by the author.
2/03/2007 05:44:00 PM
Gnaniyar @ நிலவு நண்பன் said...

எந்தக் கவிதைகள்
என்னை அதிகம் கவர்ந்தது
என்ற போட்டியில்
எல்லாக் கவிதைகளும்
முன் வந்து நிற்கின்றன...
அதற்கு முன்னால் அவள்

2/03/2007 05:48:00 PM
சீனு said...

//நீங்க உங்க ப்ராக்ராம்மிங்(programming) அறிவை சோதிக்கத்தானே இந்த கோட் (code)எழுதுனீங்க? அதான், இன்ஃபினிட் லூப் (infinite loop) வருது.. ;-)//

ரெம்பத் தெளிவா குழப்பறீங்களே!!! நீங்க எந்த பதிவுக்கு இந்த பின்னூட்டத்தை போட்டீங்க? சுஜாதா கதைக்கா?

2/03/2007 05:52:00 PM
அஜித் குமார் said...

ரொம்ப நல்ல கவிதை வரிகள்....

5/23/2007 02:21:00 PM
Clickme4joy said...

i need வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் any can post to me sandhom@gmail.com

8/21/2007 08:55:00 PM
மதுமிதா said...

நன்றி சீனு
தபூ சங்கரின் கவிதைகள் வாசிக்க அளித்தமைக்கு
அருமை இனிமை

கவிதைகளா அவை
காதலைப் பிழிந்த சாறு
ஒரு முறையேனும் அந்த‌க் காத‌லியை ச‌ந்திக்க‌ வேண்டும்

9/11/2007 08:37:00 AM
Anonymous said...

Can u please send me the e-book @ mk1venki@gmail.com.
thanks.

10/05/2008 01:06:00 PM
Dr. V. Nagarajan said...

தபுசங்கரின் கவிதைகள் எல்லாம் ஒரு சங்கம் வைத்தால் அச்சங்கத்தின் தலைமைக்கவிதையே இல்த தேவதைகளின் தேவதை....
தொடரட்டும் தபுசங்கரின் கவிதைகள்...

9/26/2011 04:47:00 PM
Unknown said...

I want தேவதைகளின் தேவதை

4/25/2021 05:43:00 PM
nifal said...

காதலும் பொறாமை கொள்ளும் இவன் மட்டும் எவ்வாறு இவ்வளவு அழகாய் காதல் செய்கிறான் என்று?????

`~என்றும் எழுத்தாணி முனையில்
நிபால்

2/19/2022 09:38:00 PM

Post a Comment

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Indli - India News, Cinema, Cricket, Lifestyle
Tamilish NewsPaanai.com Tamil News Sharing Site Thiratti.com Tamil Blog Aggregator
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்