Share
skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

Labels

  • கவிதை (4)
  • துணுக்குகள் (2)
  • மதம் (2)
  • கதை (1)
  • கார்ட்டூன் (1)
  • தீபாவளி (1)
  • பேட்டி (1)
  • பொதுவானவை (1)

விகடனில் நான்...

Facebook Badge

Alumni.Net - Bringing School Friends Together

ஃபாலோ மீ...

'Sweet' Messaging Service

பழைய சோறு

  • ▼  2008 (2)
    • ▼  October (1)
      • தீபாவளி வாழ்த்துக்கள்
    • ►  March (1)
  • ►  2007 (1)
    • ►  September (1)
  • ►  2006 (2)
    • ►  November (1)
    • ►  May (1)
  • ►  2005 (5)
    • ►  September (1)
    • ►  April (3)
    • ►  March (1)
  • ►  2004 (4)
    • ►  October (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  May (1)

விலைவாசி...

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?

விகடனில் நான்...

  • ஒரு நிமிடக் கதை
  • நீங்கள் சென்னைவாசியாக சில உபயோக டிப்ஸ்!
  • சென்னைவாசிகளே...! பார்த்து போங்கப்பா...!!

Vb.net - p2p - Seenu

  • http://www.scribd.com/doc/7502371/Vbnet-p2p-Seenu
Visit blogadda.com to discover Indian blogs
கட், காபி, பேஸ்ட்...
Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Friday, April 29, 2005

மதமாற்ற பிரசாரம்...


மதமாற்ற பிரசாரம்...
Source : தினமலர் - 25 மார்ச் 2005
சென்னை: சென்னை நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டு கார்கில் நகரில் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மீனவ மக்களை சிலர் கட்டாய மதமாற்ற பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக விதவைகள், வேலையில்லாதவர்கள், கைவிடப்பட்டவர்களை குறிவைத்து தான் மதமாற்ற பணி "ஜரூராக' நடக்கிறது. சில கிறிஸ்தவ அமைப்புகளின் பெயர்களில் இந்த பிரசாரம் பல நாட்களாக தீவிரமாக நிடந்து வருகிறது. சென்னை காசிமேட்டில் அண்ணா நகர் குடிசைப் பகுதி, திடீர் நகர், பல்லவன் நகர், திருவொற்றியூர் கடற்கரையோரப் பகுதியில் மீனவர்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். சுனாமி பேரலையில் குடியிருந்த வீடுகளையும், உடைமைகளையும் இழந்து இவர்கள் நடுத்தெருவிற்கு வந்தனர். இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மத்திய, மாநல அரசுகள் செய்து வருகின்றன.
சுனாமியில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்காக சாத்தாங்காடு கார்கில் நகரில் தற்காலிக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் நிவாரண நிதியும், மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் சுனாமி பாதிப்புகளை மறந்து, மீண்டும் தங்கள் தொழிலை தொடங்குவதற்கு வசதியாக விசைப்படகுகளுக்குரிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டன. சாத்தாங்காட்டில் கார்கில் நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு குழுக்களாக அப்பகுதியில் முகாமிட்டு மதமாற்ற பிரசாரங்களை "ஜரூராக' நடத்தி வருகின்றனர். குறிப்பாக, விதவைகள், குழந்தைகளை பறிகொடுத்தவர்கள், வேலையில்லாமல் இருக்கும் வாலிபர்கள், சுனாமி பேரலையை கண்டு மிரண்ட குழந்தைகள் ஆகியோரை தேர்ந்தெடுத்து மதப் பிரசங்கம் செய்கின்றனர்.

வறுமையால் வாடுபவர்களிடம், "ஏசுவை நிம்பினால் அரிசி, துணிமணிகள் இவைகள் கிடைப்பதோடு, உங்கள் வாழ்வு நல்வழிப்படும். தினந்தோறும் ஜெபம் செய்யுங்கள், உபவாசம் இருங்கள். ஏசு உங்களை ஆசீர்வதிப்பார், இழந்தவற்றை மீண்டும் பெறலாம்,' என பிரசங்கம் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் வீடுகளுக்கே சென்று "மெஸ்மரிசம்' செய்து அந்த குடும்ப உறுப்பினர்களை தங்கள் மதத்தில் சேரும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

தினமும் இந்த பிரசாரம் நடந்து வருகிறது. இதற்கு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக பணம், பரிசு பொருட்களுடன் குடிசைப்பகுதிகளை முற்றுகையிடுவதால் எதிர்ப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் முன்அரசு தலையிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.


Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

மதமாற்ற பிரசாரம்...

Posted by சீனு at 4/29/2005 12:39:00 PM 0 comments
Labels: மதம்

Thursday, April 28, 2005

போப் II-ம் ஜான் பால் - சுடப்பட்டது ஏன்?


Source : எங்கோ படித்தது...
பொதுவாய் போப்பாண்டவராக இத்தாலியர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் ஜான் பால்தான் இத்தாலியரல்லாத போப். அவர் பிறந்தது போலந்தில். ஆனால் சுடப்பட்டதற்கு இது காரணமல்ல. போப் ஜான் பாலின் இயற்பெயர் கரோல் வாஜ்டிலா. போலந்தில் அப்போது அடக்குமுறை மிக்க கம்யூனிச ஆட்சி. கோயில்கள் தடை செய்யப்பட்டன. வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. கடவுள், ஆலயம், வழிபாடுகள் எல்லாமே கம்யூனிச அரசாங்கத்துக்குத் தெரியாமல் ரகசியமாய் நடைபெற்று வந்தன. இந்த அடக்குமுறை அரசால் பொதுமக்களுக்கு ஏகமாய் துயரம். இந்தச் சூழலில்தான் போப் வளர்ந்தார். ரகசியமாய் வேதம் படித்தார். மத குருவானார். அப்போது உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கம்யூனிசம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. 1978_ல் போலந்துக்காரரான ஜான் பால் போப் தேர்ந்தெடுக்கப்பட்டதுமே பல கம்யூனிசத் தலைவர்களுக்கு கலக்கம். ரஷ்ய உளவுத் துறையான கே.ஜி.பி.யின் தலைமைப் பொறுப்பிலிருந்த யூரி ஆண்ட்ரபோவ் (பின்னாளில் ரஷ்ய அதிபரானவர்), ஑நமக்கு இனி தொல்லைதான்ஒ என்று பொலிட்பீரோ உறுப்பினர்களிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. போலந்தில் அடக்குமுறையை அனுபவித்து வளர்ந்த போப் அதற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அவர்கள் கருதினார்கள். உண்மைதான். அவர் போப்பாக பதவியேற்ற மறுவருடமே போலந்து சென்றார். பல வருடங்களுக்குப் பிறகு போலந்து நாட்டுக்கு வருகை தரும் ஒரு போப் என்பதால் ஏகப்பட்ட கூட்டம்_கிட்டத்தட்ட பத்துலட்சம் பேர் என்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கூறிய மூன்று வாக்கியங்கள் அந்நாட்டு கம்யூனிச அரசாங்கத்தையே கவிழ்த்தது.
"நீங்கள் ஆண்கள். உங்களுக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. குழந்தைகளைப்போல் தவழ்ந்து கொண்டிருக்காதீர்கள்". இந்த வாக்கியங்கள் அடக்கு முறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களை உசுப்பிவிட்டது. போலந்தில் மக்கள் போராட்டம் வெடிக்க கம்யூனிச அரசு கவிழ்ந்தது. போலந்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும் கம்யூனிசம் வீழத் துவங்கியது.
போப் ஜான்பால் அடிக்கடி சொன்னது, மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை வேண்டும் என்பதுதான். கடவுள் நம்பிக்கை இருந்தாலே உலகில் அன்பு பெருகும் என்பது அவர் எண்ணம். கம்யூனிச சித்தாந்தத்தில் இருக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையை அவர் விரும்பவில்லை. அதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பின்னணிதான் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தக் காரணம்.
The hand of Mehmed Ali Agca, holding the pistol, left, aims from the crowd at Pope John Paul in St. Peter's Square on May 13. Moments later the pontiff is shot and seriously wounded.
1983 மே மாதம் 13ம் நாள், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் இரண்டாம் ஜான் பாலை சுட்ட மெஹம்மத் அலி அஃகா துப்பாக்கியுடன்.
Pope with the Murderer who shot him in 1983.
தன்னை கொலை செய்ய வந்தவனுக்கு சிறையில் சந்தித்து பாவமன்னிப்பு வழங்கும் போப்.



Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

போப் II-ம் ஜான் பால் - சுடப்பட்டது ஏன்?

Posted by சீனு at 4/28/2005 06:05:00 PM 1 comments
Labels: மதம்
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Indli - India News, Cinema, Cricket, Lifestyle
Tamilish NewsPaanai.com Tamil News Sharing Site Thiratti.com Tamil Blog Aggregator
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்