இந்தக் கதை திரு.சுஜாதா அவர்கள் எழுதியது. இந்த வார ஆ.வி-யில் வந்திருக்கிறது
"அதோ" என்று அறிவித்தார் புரொபசர். "கால யந்திரத்தைத் தயார் செய்து முடித்துவிட்டேன்!". "அப்படியா புரொபசர்?" என்றான் அவருடைய உதவியாளன். "பரிசோதனை பண்ணிப் பார்க்கலாமா?". "நல்ல ஐடியா! கடந்த காலத்தில் பத்து செகண்டுகள் பின் செல்லுமாறு முதலில் சோதித்துப் பார்க்கிறேன்!" புரொபசர் அந்த இயந்திரத்தின் சில பல் சக்கரங்களைத் திருகினார். சற்று நகர்ந்து நின்றுகொண்டார். கால யந்திரத்திலிருந்து சில உறுமல் சத்தங்கள் வெளிப்பட்டன. (மீண்டும் முதல் வரிக்கு செல்லவும்...) |
11 comments:
வாவ்!!! அருமை!!!
Indefinite Loopல மாட்டிக்கிட்டாங்களா? :-)
நிஜமாவே அசரவைத்தது :-)
ம்...ஆமாம். உண்மையிலேயே நல்ல கதை...
Really வாவ்!!!
ஆனால், இது தான் புரியவில்லை!!!
சாந்தோமில் ஒரு கல்லறையில் இவ்வாறு எழுதியிருந்தது...'இன்று இங்கு வந்திருந்தேன். ஆர்.செல்வகுமார் 1.11.2006.'
அந்தக் கல்லறை யாருடையது என்று தலைக் கல்லைப் படித்துப் பார்த்தேன். ஆர்.செல்வகுமார். தோற்றம் - 1917; மறைவு - 1977.
யாருக்காவது புரிகிறதா? ஒருவேளை, ஆவி சமாச்சாரமா??
Mike testing...
good one i too red this in vikatan im a great fan of sujatha pls post more sujtha stories
//சாந்தோமில் ஒரு கல்லறையில் இவ்வாறு எழுதியிருந்தது...'இன்று இங்கு வந்திருந்தேன். ஆர்.செல்வகுமார் 1.11.2006.'
அந்தக் கல்லறை யாருடையது என்று தலைக் கல்லைப் படித்துப் பார்த்தேன். ஆர்.செல்வகுமார். தோற்றம் - 1917; மறைவு - 1977.
//
ஆர்.செல்வகுமாரா அய்யோ??? :):):)
//ஆர்.செல்வகுமாரா அய்யோ??? :):):) //
???
சீனு, இந்த கதையின் பாதிப்பில் ஒரு கதை இங்கே
சூப்பரப்பூ.........
//இறுதி ஊர்வலத்திற்கு வரும் கூட்டம் தான் ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம் என்பதை நம்புபவன் நான். அதன் படி கூட்டத்தை சேர்த்துக் கொண்டிருக்கும் ஓர் தமிழன்.//
கை கொடுங்க சீனி.. இதுக்கே உங்களுக்கு ஒரு தனி பின்னூட்டம் போடணும்.. போட்டுட்டேன்.. நானும் உங்களை மாதிரி சுற்றம் தேடும் ஒரு 'தமிழன்'தான்..
Post a Comment