Wednesday, July 07, 2004
நான் ரசித்த கவிதைகள்
Source : பலவற்றின் தொகுப்பு (சத்தியமா நான் இல்லீங்கோ...)
கந்தையானாலும்
கசக்கிக்கட்டு
சரிதான்.
அது காயும்வரை
எதைக் கட்டுவது?
பயணம்
ஒவ்வொரு
இரவு நேரப் பயணத்திலும்
பேருந்தோ
இரயிலோ
யாரோ ஒருவன்
தூக்கம் இழக்கிறான்
யாரோ ஒருவன்
பட்டினி கிடக்கிறான்
யாரோ ஒருவன்
எதையோ
பறி கொடுத்துத்
தவிக்கிறான்
யாரோ ஒருவன்
இடம் மாறி
இறங்கித் தொலைக்கிறான்
யாரோ ஒருத்தி
கணவனுக்குத்
துரோகம் இழைக்கிறாள்
மணமகளாய்
மாப்பிள்ளையுடன்
மகளை
வழியனுப்பி
வீடு வந்த அம்மாவின்
சுருக்குப் பைக்குள்
சுருங்கிக் கிடக்கின்றன
மகளின்
காதல் கடிதங்கள்
காமம்
யாவரும்
வந்து சேரவேண்டிய புள்ளி
யாவரும்
சுற்றிச் சுழலும் அச்சு
யாவரும்
நீந்திக் கடக்காத சாகரம்
யாவரும்
இளமையைத் தொலைத்த மணல்
யாவரும்
எண்ணித் துணிந்த கருமம்
யாவரும்
தாயம் உருட்டிய கட்டம்
யாவரும்
தலை குனிந்து இரந்த யாசகம்
யாவரும்
உயிர்த்திருக்கப் பருகிய நஞ்சு.
அவன்
மனைவியைத் துறந்து வந்தாள்
அனள்
கணவனைத் துறந்து வந்தாள்
இருவரும் வாழ
போதிய இடமிருக்கிறது
இருவருக்கும் சேர்த்தே
கனிகள் விளைகின்றன
இருவருக்கும் பொதுவாக
பொழுது புலர்கிறது
பொத்திக் கொள்க
தூற்றுமொழி தூற்றும்
உமது நற்ற வாயை
'வேண்டவே வேண்டாம்' என்பாள்
'மாட்டவே மாட்டேன்' என்பாள்
'ஆகவே ஆகாது' என்பாள்
'முடியவே முடியாது' என்பாள்
கடும் எதிர்ப்பால்
அடம் பிடிப்பாள்
கடைசியில் எண்ணச் செய்வாள்
இவளா வேண்டாம் என்றவள்?
உனக்கும் எனக்கும் இடையில்
பொய்யறு புன்னகை
சதா
சிந்திக்கொண்டேயிருக்கிறது
உன் மனதுக்கும் தெரியும்
என் மனதுக்கும் தெரியும்
நமக்குள் ஒரு
நாள்
மெய்யுறு புணர்ச்சி
நிகழத்தான் போகிறது
நமது புன்னகை
அத்தனை அர்த்தத்துடன்
உதிக்கிறது
பொருட்பெண்டிரக்
கைது செய்யும் காவலர்
அவள்
அருட்பார்வையை இரப்பர்
அய்யாவுக்குத் தெரியாமல்
நாளைக்கு இது
வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
எனக்கு
சங்கீதம் தெரியாது
பாடும் குமரியர் பாவனைகள்
எனக்குள் எழுப்பாத இசையா
கல்யாணா ரிசப்ஷன்
யார் யாரோ யார் யாரோ
வருவார்கள் போவார்கள்
வாயால் புன்னகைப்பார்கள்
பரிசென்று பாக்கெட்டுகள் குவியும்
பரும்பாலும் இஸ்திரிப் பெட்டி
மாலையில் ஜிகினா கழுத்தறுக்க
மேளசப்தம்
மண்டைக்குள் இடிக்கும்
உடம்பெல்லாம் எரியும்
உள்ளங்கை ஈரமாகும்
கால்கள் பூட்சுக்குள்
காற்றுக்காய்த் தவிக்கும்
கெடிகாரம் நகராது
அத்தனை கண்களின்
அவஸ்தை தரும் பார்வை வேறு
இத்தனைக்கும் நடுவில்
மகத்தான ஆறுதலாய்
என்னருகில், மிக அருகில்
உன்
வெள்ளை விரல் நுனியில்
மருதாணி.
- ம. பூரணி
பேருந்து.
நிறுத்தத்தில்
நிற்காமல் போகும்
பேருந்தைத்
திட்டுவதும்
எல்லா நிறுத்தத்திலும்
நின்று நின்று போகும்
பேருந்தைத்
திட்டுவதும்
பயணியர்க்கே வாய்ந்தது
பெண்கள் / ஆண்கள்
புகை பிடிக்காதீர்
படிகளில் பயணம் செய்யாதீர்
திருக்குறள்
வள்ளுவர் புகைப்படம்
ஜன்னலில் கை நீட்டாதீர்
எதையும் அறியாது
பயணம் செல்வர்
கல்லூரி மாணவர்!
நெரிசல் பேருந்தில்
தொடை இடித்து மார்பு நசுங்க
தோள் பையுடன் ஏறினாள்
அய்ந்தரை மணிப் பெண்.
அக்குள் நாற்றங்களைச் சுவாசித்து
மேல்கம்பியை ஊன்றுகோலாய்த் தாங்கி
மேடுபள்ளங்களில் குலுங்கி
வியர்வைக் குளியலில் நனைந்து
மனித மூட்டைக்குள் திணறி
பெருமூச்சோடு இறங்கி நடந்தாள்
பயணச் சீட்டின் பின்புறம் எழுதிய
மீதிச் சில்லறையை மறந்தவாறு!
அமரர் ஊர்தி விபத்து.
ஜன்னல் வ்ழியே
எட்டிப் பார்த்தது பிணம்
இன்னொரு பிணத்தை!
யாரோ எடுத்த வாந்திமேல்
மணல் தூவப்பட்டதில்
நெரிசலிலும்
காலியாகவே இருந்தது
ஓர் இருக்கை!
வார இதழ் படித்தவாறு
பயணம் போகும் பெண்ணுக்கு
எப்படித் தெரிகிறதோ,
அவள் இறங்கும் நிறுத்தம்.
ஒரே குரல்...
இடிந்து கிடக்கின்றன
மசூதிகள்...
இடிபாடுகளின்
உள்ளிருந்து
எட்டிப்பார்க்கிறான்
இறைவன்!
எரிந்து கிடக்கின்றன
தேவாலயங்கள்...
சாம்பல் குவியலில்
மெல்ல அசைகிறது
கர்த்தரின் தலை!
காயம்பட்டு கிடக்கின்றன
கோவில்கள்...
காதுகளைப் பொத்தியபடி
கண்திறந்து பார்க்கிறான்
கடவுள்!
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கும்
கூட்டத்தை நோக்கி
மூவரும் கேட்கிறார்கள்
ஒரு கேள்வி...
"உங்களில் யாராவது
ஒரு மனிதன் இருந்தால்
வரச் சொல்லுங்கள் -
ஒன்றாக நாங்கள்
உயிர்த்தெழுகிறோம்!"
- மு. மேத்தா
அமெரிக்காவில்...
அம்மா இங்கே
அசலான நெல்லூர்
அரிசி கிடைக்கிறது
டாலர் அதிகமில்லை
வடிப்பது சுலபம்
மைக்ரோவேவ் அடுப்பில்
வெந்து முடிக்க
ஐந்தே நிமிடங்கள்
கஞ்சி வடிக்கும்
கஷ்டங்கள் இல்லை
கரிப்பிசுக்கு
கல்நெல்லில்லை
ஆனால் ஏனோ
இந்திய அடுப்பில்
அழுதுகொண்டு தினமும்
அரைக் குழைசலாய்
நீ வடித்த ஐ ஆர் எட்டின்
சுவைகூட இல்லை!
- வெ. அனந்தநாராயனன்
குழந்தை
இதம் வேண்டி
என் கைகோர்த்து
உறங்கும் குழந்தையின்
கைகள்
நம்பிக்கொண்டிருக்கின்றன
கனவில் விரட்டும்
பிசாசுகளிடமிருந்தும்
புலிகளிடமிருந்தும்
காப்பாற்றித் தருவேன் என
நள்ளிரவில் துழாவும்
குழந்தைக்கு தட்டுப்படுகிறது
கசங்கிய படுக்கை விரிப்பு
காலம்
பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ பிளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்
வாழ்க்கை
தெருமுனையிலேயே
ஒதுங்கிக் கொள்வாளாம்
பெரியாயி கிழவி
வீட்டுக் கொள்ளைவரை
அனுமதித்திருந்தாள்
லட்சுமி பாட்டி
பாத்திரம் தேய்க்க
துணி துவைக்க
முற்றம் வரை
நடமாடவிட்டாள் அம்மா
வீட்டுச் சாவி தந்து
விரைகிறேன் நான்
வழிக்கு வரவைத்து
விடுகிறது
வாழ்க்கை
படிப்பு
புத்தக மூட்டை
உணவுப் பைகளெல்லாம்
வசதியாக இடம்பிடித்திருக்க
தொங்கிக்கொண்டே
செல்கின்றன குழந்தைகள்
எல்லா ஆட்டோ க்களிலும்
விபத்து
விபத்து நடந்த இடத்தை
கண நேர தாமதமின்றி
கடக்கிறேன்
பூர்வீக வீட்டை
ஒரு சொட்டு கண்ணீரின்றி
காலி செய்தேன்
குழந்தைகளின் ஆர்ப்பரிப்பை
கூச்சலென்று
புறந்தள்ளி நடக்கிறேன்
செய்திகளில் தெறிக்கும்
ரத்தம் பார்த்தும்
சாப்பாட்டைத் தொடர்கிறேன்
தெரிந்து கொண்டிருப்பீர்கள்
கண் விழித்ததும்
தொட்டிச் செடிகளுக்கு
நீரூற்றும்
சராசரி நானென்று
திருவிழா
திருவிழாவின் சந்தோஷத்தை
காற்றடைத்த பலூனாக்கி
கையசைத்தவாறே
திரும்புகிறார்கள் குழந்தைகள்
விடியலே...விடியலே!
சைதாப்பேட்ட சரோசாக்கு
கோழி கூவியும் விடியலே
சரக்கடிச்ச மச்சானுக்கு
மப்பு இன்னும் தெளியலே
சிட்டி பஸ்ஸு இடிச்சதுல
சின்னசன் காலு வெளங்கலே
இஸ்கூலு போன மக
எங்க போச்சோ திரும்பல
எவ்ளோ நேரம் காத்திருந்தும்
மெட்ரோ லாரி வரவில்லே
கட்டட வேல போனாக்க
மேஸ்திரி கண்ணு சரியில்லே
மீட்டர்வட்டி மின்னல்வட்டி
சேட்டு தொல்ல தாங்கல
ஒழச்சுக் கொட்டுற புருஷனா
சாமி கிட்ட வாங்கல
காதல் சொன்ன பால்பாண்டி
மூஞ்சி இன்னும் மறக்கலே
சைதாப்பேட்ட சரோசாக்கு
கோழி கூவியும் விடியலே.
தூங்காதே தம்பி தூங்காதே...
தொங்காதே...பஸ்ல தொங்காதே
நீ தொங்கினாலிம் ஃபிகரைப் பார்த்து மங்காதே
படிக்கட்டில் தொங்கியவன் பல்லை இழந்தான்
ஜன்னல் கம்பியில் தொங்கியவன் காலை இழந்தான்
ஃபுட் போர்டில் தொங்கியவன் கையை இழந்தான்
இப்படி பொருப்புள்ள இளைஞர்கள் சாவதினால்
நம்மை நம்பி வந்த ஃபிகரு எல்லாம் ஏங்குதப்பா!
முத்தம்
ஒரு
விளக்கேற்றுவதுதான்
முத்தம்.
ஆனால்...
விளக்கைப் போல
சட்டென்று
ஊதியணைக்க முடியாது.
கொடுக்கும் முத்தத்தைவிட
லேசானது
வாங்கும் முத்தம்
ஆனால்...
லேசாக
வாங்கிவிட முடியாது.
- பழநிபாரதி
மறதி
கற்புக்கரசி
கண்ணகி, சீதை,
நளாயினி
பெயரெல்லாம்
நினைவில் நிற்கிறது!
கற்றுக்கொடுத்த
தமிழ் ஆசிரியை
பெயர்தான்
மறந்துவிட்டது!
கால காலமாய்
காலிலே சலங்கை பூட்டி
கோவிலிலே ஆடவிட்டீர்கள்!
முதுகிலே சூடுவைத்து
அந்தப்புரத்திற்குள்
அனுப்பினீர்கள்!
உப்பில்லாத வ்ணவு கொடுத்து
மூலையிலே அமர்த்தினீர்கள்!
சந்தேகம் வந்தபோதெல்லாம்
நெருப்பிலே இறக்கினீர்கள்!
இப்போது...
வேலைக்கு அனுப்பிவிட்டு
வேவு பார்க்கிறீர்கள்!
பல்லவி
குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண்விழித்து
வீதி வீதியாய்
குடங்களோடு அலைந்தோம்...
எங்கள் துயரம் தீர்க்க
எம்.எல்.ஏ-வை தேடினோம்!
தொலைபேசியில்
எப்போது கேட்டாலும்
கிடைத்த பதில்..
"தூங்குகிறார்..."
"குளித்துக்கொண்டிருக்கிறார்"
நன்றி
பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த
அந்த தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்.
இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்...
கைப்பிள்ளையின்
கால் கொலுசை தடவியபடி!
அவதாரம்
வேலு நாச்சியாராய்
குதிரை மீது ஏறிவந்தேன்.
இராணி மஙகம்மாளாய்
வீரவாள் சுழற்றினேன்.
ஜான்சி ராணியாய்
எதிரிகளை பந்தாடினேன்.
குக்கர் சத்தம் கேட்டது
சமையலறைக்குள் ஓடினேன்!
நீ?
தந்தையை,
கணவனை,
சகோதரனை,
தன் சிறுவயது மகனை,
போர்க்களம் அனுப்பிய
புறநானூற்றின்
வீரத்தாயே...!
எல்லோரையும் அனுப்பிய
ந்ண ஏன் போகவில்லை?
ஜிலீர்...
ஆசிரியராகும் கனவு
உடைந்து நொறுங்கியது!
அரசு மது பாட்டில்களை
அடுக்கி வைக்கும் வேலையில்...
அன்பு
அன்பு
என்ற தலைப்பில்
மிகச் சிரிய
கவிதை
கேட்டார்கள்...
"அம்மா"
என்றேன் உடனே...
கேட்டது அம்மாவாக
இருந்திருந்தால்
இன்னும் சிரியதாய்
சொல்லியிருப்பேன்
"நீ"
என்று...
நினைவு
குழந்தையோடு கொஞ்சிக்
கொண்டும்
மனைவியோடு சந்தோஷமாய்
பேசிக்கொண்டிருக்கும்
மாலைப்பொழுதுகளில்
ந்னைவுக்கு வந்து
உருத்துவாள்
முதன்முதலில் பெண் பார்த்து
இன்னும் திருமணமாகாத
அந்தப் பெண்!
நான்
அம்மாவிற்கு மகனாய்
அப்பாவிற்கு வாரிசாய்
அண்ணனுக்கு அடிபணியும்
தம்பியாய்
நண்பர்களுக்கு
நன்றியுள்ளவனாய்
காதலிக்கும்போது
காதலனாய்
சிரிப்பவர்களுடன் சிரித்து
அழுபவர்களுடன் அழுது...
எப்பொழுது,
எங்கே,
எது நான்?
காத்திருந்து காத்திருந்து
சோர்கையில்
நீ வருவாய்
கோபப்படுவேன் நான்
வெட்கப்படத் தெரியாததால்...
காதல்?
இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்...
காதலையா???
அமைதி
கல் சிலைகள்
கல் விளக்குகள்
கல் சங்கிலிகள்
கல் சிற்பங்கள்
மற்றும்
கல் தூண்கள்
எப்போதும்
பேசிக் கொண்டிருக்கின்றன
கோயில்களில்
உறைந்து கிடக்கும்
கனத்த அமைதியின்
ரகசியத்தை
காதல்
தண்டவாளத்தில்
தலை சாய்த்துப்
பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்...
நீ நடந்து வருகிறாயா?
இரயிலில் வருகிறாயா?
காதல்
ஒரு விணோத நெருப்பு
அது
பற்றவைத்தால்
பற்றாது
அணைத்தால்
அணையாது...
என்ன புண்ணியமோ...
வாசலில் கையேந்தும்
குருடனைக் கடந்துபோய்
கோயில் உண்டியலில்
போடும் பணத்தால்...
வாழ்ந்து கெட்டவரின்
வீட்டை
விலை பேசி
முடிக்கும் பொழுது
கேட்கலாம்
கொல்லை புரத்தில்
ஒரு
விசும்பலை...
அடி தூளு...
காதல்
ஒரு குவாட்டர் பாட்டில்
மாதிரி
பாட்டில் ஆடாது...
ஆனால்...
அதை போட்டால்
நீ
ஆடிடுவாய்...
அம்மன்
மாரியம்மன் பண்டிகைல
கோடி வீட்டு
சாந்தி மேல
அம்மன் இறங்கி
ஆடுகையில்
என்னிடம் வந்து
கேட்டாள்
"மகனே!
என்ன வேண்டும் கேள்!!"
எப்படி
கேட்பேன்
"நீ தான்" என்று.
அந்தி
படையல் வைத்து
ந்லைத்தை வெட்டி
ஆழ்குழாய் தோண்டி
...
ஒரு நீரூற்றை அடைய
இத்தனை பிராசையா
என்று கேட்கும்
சின்னஞ் சிறு
தாவரமே!
உனக்கு எப்படி
தெரியும்
காயும் உன் சிறகுகள்
இந்த அந்தியை
எவ்வளவு
கருப்பாக்குகிறதென்று.
பூக்கள்
பூக்களை
ரசிப்பவர்கள்
அதை செடியிலே
சிரிக்க
விடுவார்கள்!!!
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment