Friday, October 15, 2004
நான் ரசித்த கவிதைகள் 2
Source : எங்கேயோ படித்தது...
அதிசயமாய்
இருக்கிறது
இத்தனை இனிய காதலர்களின்
காலடிச் சுவடுகளை
உள்ளிழுத்தும்
கடல் இன்னும்
உப்பு கரித்துக் கொண்டிருக்கிறது!
இரட்டை இனிமை
சில சமயம்
இரட்டை இம்சை!
காதலி சிணுங்கலும்
அவளது
கைப்பேசி அழைப்பின்
சிணுங்கலும்!
- கு.வைரச்சந்திரன்
நாம் சந்தித்துக்கொள்வதுண்டு.
ஆனால்,
நாம் பேசிக்கொண்டதில்லை.
என்னருகில் உள்ளவருடன்
நீயும்
உன்னருகில் உள்ளவருடன்
நானும்
பேசிக்கொள்வதுண்டு.
இதற்காக நாம்
வருத்தப்படுவதாகக்கூட
எனக்குத் தோன்றவில்லை.
பேசத் தயங்கிப்
பரிமாறிக்கொள்ளும்
புன்னகைகளும்
மௌனங்கள் தரும்
கனமான அர்த்தங்களும்
பேசுவதில்
நிறைவடைந்துவிடுமா என்ன?
- ஹம்ஸா
அவசியமில்லை...
நீரூற்றுபவனைப் பற்றித்
தெரிந்திருக்க...
பூக்களுக்கும்
பூக்களைப் போலவே
காதலுக்கும்!
எப்படி
அர்த்தப்படுத்திக் கொள்ளட்டும்...
என்முன்னே
கிழித்தெறிந்த கடிதத்தை
எனக்குத் தெரியாதபடி,
நீ
சேகரித்துச் சென்றதை?
- ஒப்பிலான்
இனி காத்திருக்கப் போவதில்லை!
மணி ஒன்று பதினைந்துக்கு
வரும் பேருந்துக்காக
பன்னிரண்டு மணிக்கே - வந்து
போகின்ற பேருந்தெல்லாம்
எட்டிப் பார்க்கும்போது
ஏற்படும் ஏளனப் பார்வைகள்
ஏராளம் - ஆனாலும்
ஏதும் அறியாமல் - நீ
பேருந்தில் நகர்கையில்தான்
நினைப்பேன்...
இனி காத்திருக்கப் போவதில்லை - என்று
தினம் - தினமும்!
- கு.கனிராஜ்
தபூசங்கர்
நீ
உன் தோழிகளோடு
கைப் பந்து
ஆடுவதுதான்
எனக்குத்
திருவிளையாடல்.
அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்.
அன்று
நீ குடை
விரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால்
நீ எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்
கொள்கிறேன்.
அன்னை்
குற்ற நெஞ்சு குறுகுறுக்கும் - அதில்
குறைகள் பல உண்டு - எனைப்
பெற்றவள் செய்த சமையல் தான் அதில்
பிழைகள் கண்டதுண்டு - ருசி
அற்றுப்போன அமெரிக்க வாழ்வில்
பற்றே இல்லையடி - ஒரு
வற்றக்குழம்பு அதுபோதும் - அன்னைக்
கைமணம் அதில் வேணும்
- ரவி அன்பில்
பழநிபாரதி கவிதைகள்
வரவேற்பறை
கதவு திறந்ததும்
காற்றின் விரல்பட்டுச்
சிணுங்குகிறது
தொங்கும் அழைப்புமணி
பணமூட்டைகளைச்
சுமக்கும் குபேரன்...
பக்கத்திலேயே
கை தூக்கி நிற்கிறார்
சிரிக்கும் புத்தர்
கண்ணாடித் தொட்டியில்
தங்க மீன்களின்
விளையாடல்
வீட்டைச் சுற்றி
ஒரே கூட்டம்...
ஏலம் விட்டது
நீதிமன்றம்.
பூஜையறை
பிளாஸ்டிக் மாவிலைத்
தோரணங்கள்.
ஸ்டிக்கர் கோலங்கள்.
டப்பர் வேர் டப்பாவிலிருந்து
ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்.
கடவுள் ஏன் கல்லானான்?
கேட்டான் கண்ணதாசன்...
கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்?
பார்த்துக் கொண்டிருக்கிறான் பழநிபாரதி.
குளியலறை
கைம்பெண் ஒருத்தியின்
குளியலறையில்
சுவரில் உள்ளது
ஸ்டிக்கர் பொட்டு.
சமையலறை
தீ
சமைக்கிறதா
எரிக்கிறதா?
தெரியாமலேயே
தாளிக்கிறாள் அவள்
காற்றில் கலந்து வெளியேறுகிறது
அவளது
பெருங்காய வாசம்.
படுக்கையறை
நீல வெளிச்சத்தில்
விலக்கப்பட்ட முள்தேடி
ஓயாமல் சுழல்கிறது
இசைத்தட்டு
திராட்சை பறிக்கும் பெண்ணின்
ஓவியத்திற்குக் கீழே
வெறுமையாக உள்ளது
பழக்கூடை.
பூனைகளுக்குக்
குழந்தைகளின் குரலைக் கொடுத்து
எதையெதையோ
கேட்க வைக்கிறது
இந்த இரவு.
வீடு
ஓரங்கிழிந்த பாய்
காரை பெயர்ந்த சுவர்
ஒட்டடை படிந்த ஜன்னல்
ஓசையெழுப்பும் மின்விசிறி
கலைந்த தலையணை
கழுவாத பாத்திரம்
என்றாலும் என்வீடு இனிது
எனில், எதிர்வீடு உனது
விருப்பம் போல் ஆணியடிக்க
விருந்தினரை உபசரிக்க
விடிய விடிய விளக்கெரிக்க
முடியாத வாடகை வீட்டில்
வசிக்கலாம், வாழமுடியாது
நகைவிற்று நிலம்விற்று
நடுநடுவே கடன்பெற்று
போய்ச்சேரும் புதுவீடு
புரிய வைக்கும்
நிம்மதியிழக்க எளியவழி
வீடு கட்டுவது
அண்ணாந்து வியக்க
அம்மா வீடு
மல்லாந்து கிடக்க
மாமியார் வீடு
நல்லவீடு ரெண்டிருந்தும்
சின்ன வீட்டுக்கேங்கி
செத்துத் தொலைவான்
இலங்கேஸ்வரன்
கூட்டிப் பெருக்ககொண்டாடிச் சிரிக்க
நீட்டிப் படுக்க
நிம்மதி சுகிக்க
கேட்கும் பக்தனுக்கு
இல்லை ஒரு வீடு
அப்பன் முருகனுக்கோ
ஆறு படைவீடு
கொளுத்திய பத்தி வாடை
கூடிவைத்த ஒப்பாரி
சிரிக்காத மாலைகள்
உறவு பிணக்குயென
கலவரப்படும் துக்க வீட்டில்
யாரிடம் வசூலிப்பது
கொடுத்த கடனை?
வீட்டுக்கு வீடு
இருக்கிறது வாசல்
எந்த வீடாயினும்சோறு கிடைக்கிறது
கலியமூர்த்திக்கு
பின் வாசலில்.
பியானோவில் விழுந்த பூனை
இசையெழுப்புதைப் போல
காதல் எல்லோரையும்
கவிஞனாக்கி விடுகிறது.ஒஒ
யாரோ... அவன் யாரோ..?
அடிக்கடி வருது
அந்தக் கனவு.
கொட்டும் மழை...
ஒற்றைக் குடை...
உள்ளே நானும் அவனும்.
அவன் முகம் மட்டும்
தெரிவதில்லை.
ஏனோ... அது ஏனோ..?
ராஜகுமாரன்..?
கொஞ்சம் பந்தா
நிறைய பணிவு...
கொஞ்சம் சில்மிஷம்
நிறைய சின்சியர்...
கொஞ்சம் கேர்லெஸ்
நிறைய பொஸஸிவ்னெஸ்...
எங்கேடா இருக்கே
என் செல்லம்..?ஒஒ
காதல்ங்கிறது?
இதயத்துல ஹைட்ரஜன் பாம்
அடிவயித்துல சல்ஃப்யூரிக் ஆசிட்
மூச்சுல லோ&ஆக்ஸிஜன்
கிறங்கடிக்கிற கெமிஸ்ட்ரிபா!
ஊ லலல்லா
உள்ளம் கேட்குமே மோர்!ஒஒ
காதலர்களுக்கு..?
சில காலம் சேர்ந்து
சில காலம் பிரிந்து
ஆயுசுக்கும் சொல்லிட்டேயிருங்க
ஐ லவ் யூ..!ஒஒ
அப்ளிகேஷன்ஸ்..?
இவ்ளோ.... வந்திருக்கு!
எல்லாவற்றிற்கும்
நோஒ சொன்ன
இடியட் பியூட்டி நான்.ஒஒ
காதல்
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது
நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.
நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது
என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.
அடி, என்னை மறந்தவளே..!
செட்டியார் வீடு கட்ட
கொட்டிப் போட்ட
மண்ணுல
கோபுர வீடுகட்டி
கொஞ்சி விளையாண்டது
நினைவிருக்கா?
தெருவோரம் நின்ன மரம்
என் திண்ணையோரம்
நட்ட மரம் (மின்கம்பம்)
எப்படித்தான் எரியுதுன்னு
என்னைக் கேட்டியே,
நினைவிருக்கா?
வட்டிலில சோறுபோட்டு
வானத்து நிலா பார்த்து
ஒண்ணா உட்கார்ந்து
உருட்டித் தின்னமே
உனக்கது நினைவிருக்கா?
பள்ளிக்கூடம் போகயில
பாவி மழ பெய்யயில
ஓடிப் போய் மரத்தடியில்
ஒண்டியது
நினைவிருக்கா?
வீடு திரும்பயில
விட்ட மழ தொடரயில
உன் சந்தன முகத்துல
சாரல் படக்கூடாதுன்னு
என் சட்டையக் கழட்டித்
தந்தேனே நினைவிருக்கா?
விளையாட நீ வரல,
வீதியில காணவில்லே
உன் வீடுதேடி நான்
வந்தேன்
அந்த நாள்
நினைவிருக்கா?
பச்ச ஒலையில
பத்திரமா நீயிருந்த
பதினாறு வயசு வியாதி
பத்திக்கிச்சு நமக்குள்ள
பட்டப் படிப்பு படிச்சு வர
உன்னை
பஸ் ஏத்தி அனுப்பி
வெச்சேன்
பாவி மக உம் பெயரை
மனசுக்குள்ள செதுக்கி
வெச்சேன்
எல்லாமே மாறிப் போச்சு
என்னனென்னவோ
ஆகிப்போச்சு
எம் மகளும் உம் மகனும்
ஒண்ணா
விளையாடுதுங்க
நாளைக்கு அதும்
பொழப்பு
நம்மப் போல ஆகணுமா?
நாங் கண்ட ஒரு கனவு
நாசமா போகணுமா?
- எடிசன்
ஜெய பாஸ்கரன் கவிதைகள்
துப்பாக்கித் தோட்டா
துளைத்த நிலையிலும்
தான் சொல்லவேண்டிய
அனைத்தையும்
தெளிவாகச் சொல்லிவிட்டு
உங்கள் கதாபாத்திரம்
சாகும்போது,
கூடவே சாகிறது
சினிமா!
திரையிட்ட
பதின்மூன்றாயிரம்
அடியைவிட
நன்றாக இருக்குமோ
என எண்ணத்
தோன்றுகிறது |
எடுத்து எடுத்து நீங்கள்
வெட்டி வீசிய
நாற்பதாயிரம் அடி!
நீச்சல்குளத்தில்
நீச்சல் உடையில் நீராடி,
அதே உடையில்
நடுச்சாலையில் நடனமாடி,
பூங்காக்களில்
படுத்துருண்டபோதெல்லாம்
வராத வெட்கம்,
எங்கிருந்தோ வந்துவிடுகிறதே
உங்கள் கதாநாயகி
மணமகளாக மாறும்போது!
அயல்நாடுகளில்
நீங்கள்
ஆடிப் பாடும்போதெல்லாம்
அசையாமல் நின்றுபார்த்து,
அதிர்ச்சியுறுகிறார்கள்
அந்நாட்டு மக்கள்!
தான் காதலிக்க ஒரு பெண்
தன்னைக் காதலிக்க ஒருபெண்
பாசமாகத் தோளில் சுமக்க
ஒரு தங்கை
எனும் வகையில்,
குறைந்தபட்சம்
மூன்று பெண்களாவது
தேவைப்படுகிறார்கள் |
உங்களின் ஒரு
கதாநாயகனுக்கு!
வயது
ஒரு பிரச்னையே
இல்லை |
உங்களின்
கதாநாயகர்களுக்கு...
அது மட்டுமே
பிரச்னை
கதாநாயகிகளுக்கு!
திருட்டு
வி.சி.டி|க்காரர்கள்மீது
எனக்குக் கோபம்தான்...
எதைத் திருடுவது
என்கிற
விவஸ்தையில்லாதவர்கள்!
சொல்ல நினைத்த நியாயத்தை
நாலுவரி எழுதி, மேலே நகரவிட்டு,
அதைப் படிக்கவும் செய்தீர்களே...
அப்போதுதான்
மீண்டும் உறுதி செய்துகொண்டேன் |
அந்த இரண்டரை மணிநேரப் படத்தில்
நீங்கள்
எதையுமே சொல்லவில்லை என்பதை!
குழந்தைகள்
வேதனையும் வாழ்க்கையின்
ஒரு பகுதிதான் என்று
குழந்தைகளுக்குக் கற்பிக்காதீர்கள்,
அவர்களாவது ஆனந்தமான மனிதர்களாக
வளரும் வாய்ப்பை ஏன் பறிக்கிறீர்கள்?
Labels:
கவிதை
Tuesday, August 31, 2004
தயிர், மோர், வெண்ணைய்...
Source : எங்கேயோ படித்தது...
பால், உடலுக்கு ஊட்டம் தருகின்ற அமுதம் என்றால் அதிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவிதமான பலனைத் தருகின்றன. இதில் நிறைய பேருக்குப் பிடித்தமான உணவு தயிர்.
பலர், தயிர் இல்லாமல் சாப்பிடுவதே இல்லை. ஓட்டல்களில் தயிர், சாப்பாட்டோ டு சேர்த்து தரப்படாமல், தனிவிலை கொடுத்து வாங்கிச் சாப்பிடும் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தயிர் சாப்பிடுவது என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது.
பெருநகரங்களில் அதன் தேவையைச் சமாளிக் கும் அளவுக்குத் தயிர் உற்பத்தி இல்லை. இதனால் வெளியூர்களிலிருந்து கேன்களில் பார்சல் செய்யப்பட்ட தயிர் ரயில்களில் வந்து சேர்கிறது. நிறையப் பேர் தயிரை மொத்தமாக ஃபிரிஜ்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து அதே குளிர்ச்சியோடு சாதத்தில் கலந்து சாப்பிடுகிறார்கள். ஓட்டல்களிலும் தயிர், தயிர்சாதமெல்லாம் ஃபரிஜ்ஜில் வைத்துதான் சப்ளை செய்யப்படுகின்றன.
தயிர், இந்தியர்களின் பாரம்பரிய உணவு கிடையாது. மோர்தான் நம் முன்னோர்களால் விரும்பிப் பருகப்பட்டது. சமீபகாலமாகத்தான் தயிர் பாப்புலர் உணவாகிவிட்டது.
இயல்பாகவே ஜில்லென்று இருக்கும் தயிரை ஃபிரிஜ்ஜில் வைத்து இன்னும் குளுமையாக்கிச் சாப்பிடுவது வெயிலுக்கு ரொம்ப இதமானது என நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அது இல்லை... தொட்டுப் பார்க்கும்போது ஜில்லென்று இருந்தாலும் தயிர் நிஜமாகவே உடல் சூட்டைக் கிளப்பிவிடும். கெட்டியான தயிரைப் பார்த்தாலே பசி கிளர்ந்தெழும். யாரையும் சாப்பிடவைக்கும் இனிமையான சுவை கொண்டது அது. இந்த இரண்டு விஷயங்களைத் தவிர, தயிரில் நல்ல குணங்கள் எதுவும் கிடையாது. அதனால்தான் நான் என்னைச் சந்திப்பவர்களிடம் தயிரைத் தவிர்க்குமாறு அட்வைஸ் செய்கிறேன்!
தயிர் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். உடலில் கொழுப்பைக் கூட்டி ஏகப்பட்ட உபாதைகளைக் கொடுக்கும். உடலின் எல்லா சுரப்பிகளையும் தாறுமாறாகச் செயல்பட வைத்து ஹார்மோன்களின் சுரப்பை அதிகமாக்கும்.
உடலில் ஏற்கெனவே எங்காவது அடிபட்டதாலோ, வேறு காரணங்களாலோ வீங்கியிருந்தால் அந்த வீக்கத்தை அதிகமாக்கும். ரத்தக்கசிவு நோய் வர வாய்ப்புண்டு. தூக்கத் தையும் கெடுக்கும். நேரங்கெட்ட நேரத்தில் தூக்கம் வரும்... வரவேண்டிய நேரத்தில் வராது! சிலருக்கு ஜுரத்தையும்கூடத் தயிர் பரிசாகத் தரும்!
வாதத்தைக் குறைக்கும் அதே நேரத்தில் தயிர், பித்தத்தையும் கபத்தையும் அதிகமாக்கும்.
ஆயுர்வேதம் தயிரை எப்போதெல்லாம் சாப்பிடக் கூடாது என்று பெரிய பட்டியலே போட்டுக் கொடுத் திருக்கிறது. கண்டிப்பாகத் தயிரை இரவில் சாப்பிடக்கூடாது. பனி கொட்டும் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களிலும், கோடை துவங்கும் தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் சாப்பிடக்கூடாது. ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது. கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது.
நல்ல தயிரைக்கூட வெறுமனே சாப்பிடக்கூடாது. ஒரு கப் தயிரில் சில துளிகள் தேன், ஒரு சிட்டிகை நெய், அரை ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் நெல்லிக்காய் துண்டு, கொஞ்சமாக வேக வைத்த பாசிப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றைக் கலந்து சில நிமிடங்கள் வைத்திருந்து சாப்பிட்டால் பரவாயில்லை. தயிரின் மோசமான குணங்களை இவை ஓரளவுக்கு வடிகட்டிவிடும்.
இப்படி ஏதாவது ஒன்றைச் சேர்த்துச் சாப்பிட்டாலும்கூட தயிரைத் தினமும் சாப்பிடக்கூடாது என்கிறது ஆயுர்வேதம். இவ்வளவு குழப்பிக்கொண்டு அதைச் சாப்பிடுவதைவிடப் பேசாமல் சாப்பிடாமலே இருந்துவிடலாம்!
தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். 'இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு களுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதை யில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது! நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட் கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!
ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது! அந்த மாதிரி சமயத்தில் 'ஸ்பெஷல் மோர்' குடிக்கலாம். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். (ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது!)
அடுத்தது வெண்ணெய்... பகவான் கிருஷ்ணரின் லீலைகளில் பிரதான மானது வெண்ணெய் திருடல்தானே! பகவானே ஆசைப்பட்டுத் திருடித் தின்றிருக்கிறார் என்றால் வெண்ணெய் எவ்வளவு விசேஷமான உணவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!
வெண்ணெய், அதைச் சாப்பிடும் ஆண், பெண் இருபாலருக்குமே செக்ஸ் உணர்வைத் தூண்டிவிடும். பெண்களுக்குக் குழந்தைப்பேறு சக்தியை இது அதிகரிக்கிறது. வெண்ணெய் சாப்பிட்டால் உடல் மெருகேறும்... நல்ல கோதுமை நிறமும் தோலுக்கு வரும் வாய்ப்பு உண்டு.
மலச்சிக்கலுக்கு வெண்ணெய் அருமையான இயற்கை மருந்து. தினந்தோறும் சாப்பாட்டுக்குமுன் வெண்ணெயை வெறுமனே கொஞ்சம் சாப்பிட்டால் அது பசியைத் தூண்டிவிடும்!
கடைசியாக நெய்!
குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்றது. குறிப்பாகக் குழந்தைகள், நல்ல நிறம் பெறுவதற்கும் குரல் வளத்துக்கும் நுண்ணறிவு வளர்வதற் கும் நெய் தருகிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டரைப் போல மனிதர்களை மாற்றும் சக்தி நெய்க்கு உண்டு. புத்திசாலித் தனத்துக்கான உணவென்றே இதைச் சொல்லாம். பாடங்கள், கஷ்டமான சூத்திரங்களைப் புரிந்துகொள்ளும் சக்தி, புரிந்துகொண்டதை மறக்காமல் ஞாபகத்தில் சேர்த்துவைக்கும் சக்தி, ஞாபகத்தில் இருப்பதைத் தேவையான நேரத்தில் வரவழைத்துப் பயன்படுத்தும் சக்தி... இவை மூன்றையும் ஒருசேரத் தருவது நெய் மட்டும்தான். செரிமானத்தைத் தூண்டிவிடும் மருந்தாகவும் நெய் இருக்கிறது. கண் பார்வைக்கும் இது நல்லது!
குடலில் அதிக அளவு அமிலம் சுரந்துவிட்டால் அதைச் சரிசெய்யும் மருந்தாக நெய் இருக்கிறது. இதனால் குடற்புண்கள் வராமல் தடுக்கிறது. நெய் சுலபத்தில் உடலில் கலந்து கரையக்கூடியது என்பதால் நிறைய மருந்துகளை நெய்யில் கலந்துதான் ஆயுர்வேத டாக்டர்கள் தருகிறார்கள்!
'எல்லோருக்கும் நெய் தரலாமா? ஏற்கெனவே உடலில் அதிகக் கொழுப்பு சேர்ந்து அவதிப்படுகிறவர்களுக்கு நெய் மேலும் துன்பத்தை அல்லவா தரும்..?' என்ற கேள்வி எழக்கூடும்!
ஆனால், இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! உடலின் இயல்பான செயல்பாட்டுக்குக் கொஞ்சமாவது கொழுப்புச் சக்தி தேவை. சுத்தமாக, கொழுப்பே இல்லாத உணவு சாப்பிட்டால் சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடும். தோல் வறண்டு போய், நரம்புகள் தளர்ந்து இளம் கிழவர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுவிடும்!
ஆயுர்வேதத்தில் எந்தெந்த நிலைமை யில் நெய் சாப்பிடக்கூடாது என்று இருக்கிறது. அதன்படி பார்த்தால் கொழுப்பு ஏற்கெனவே ஏகமாகச் சேர்ந்து, அதனால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு நெய் சாப்பிடச் சொல்லி எந்த ஆயுர்வேத டாக்டரும் ஆலோசனை தரமாட்டார்கள். ஜீரண சக்தி நன்றாக இருக்கும்போதும் சளி போன்ற கபம் சம்பந்தமான நோய்கள் இல்லாதபோதும் மட்டுமே நெய் சாப்பிடுவது நல்லது.
ஆயுர்வேத முறையில் தயாரிக்கப் பட்ட மூலிகை நெய்களும்கூட இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன. சாரஸ்வத கிருதம், பிரம்மி கிருதம் போன்றவை பள்ளிக் குழந்தைகளின் கல்வியைத் தூண்டவல்லது! (கிருதம் என்றால் மூலிகை நெய் என்று பொருள்.)
நெய்யில்கூட பசுவின் நெய்யையும் எருமைப்பால் நெய்யையும் கலப்படம் செய்யக்கூடாது. கலப்பட நெய் பொதுவாக முழுமையாகப் பலன் தராது!
தயிர், மோர், வெண்ணைய்...
Labels:
பொதுவானவை
Wednesday, July 07, 2004
நான் ரசித்த கவிதைகள்
Source : பலவற்றின் தொகுப்பு (சத்தியமா நான் இல்லீங்கோ...)
கந்தையானாலும்
கசக்கிக்கட்டு
சரிதான்.
அது காயும்வரை
எதைக் கட்டுவது?
பயணம்
ஒவ்வொரு
இரவு நேரப் பயணத்திலும்
பேருந்தோ
இரயிலோ
யாரோ ஒருவன்
தூக்கம் இழக்கிறான்
யாரோ ஒருவன்
பட்டினி கிடக்கிறான்
யாரோ ஒருவன்
எதையோ
பறி கொடுத்துத்
தவிக்கிறான்
யாரோ ஒருவன்
இடம் மாறி
இறங்கித் தொலைக்கிறான்
யாரோ ஒருத்தி
கணவனுக்குத்
துரோகம் இழைக்கிறாள்
மணமகளாய்
மாப்பிள்ளையுடன்
மகளை
வழியனுப்பி
வீடு வந்த அம்மாவின்
சுருக்குப் பைக்குள்
சுருங்கிக் கிடக்கின்றன
மகளின்
காதல் கடிதங்கள்
காமம்
யாவரும்
வந்து சேரவேண்டிய புள்ளி
யாவரும்
சுற்றிச் சுழலும் அச்சு
யாவரும்
நீந்திக் கடக்காத சாகரம்
யாவரும்
இளமையைத் தொலைத்த மணல்
யாவரும்
எண்ணித் துணிந்த கருமம்
யாவரும்
தாயம் உருட்டிய கட்டம்
யாவரும்
தலை குனிந்து இரந்த யாசகம்
யாவரும்
உயிர்த்திருக்கப் பருகிய நஞ்சு.
அவன்
மனைவியைத் துறந்து வந்தாள்
அனள்
கணவனைத் துறந்து வந்தாள்
இருவரும் வாழ
போதிய இடமிருக்கிறது
இருவருக்கும் சேர்த்தே
கனிகள் விளைகின்றன
இருவருக்கும் பொதுவாக
பொழுது புலர்கிறது
பொத்திக் கொள்க
தூற்றுமொழி தூற்றும்
உமது நற்ற வாயை
'வேண்டவே வேண்டாம்' என்பாள்
'மாட்டவே மாட்டேன்' என்பாள்
'ஆகவே ஆகாது' என்பாள்
'முடியவே முடியாது' என்பாள்
கடும் எதிர்ப்பால்
அடம் பிடிப்பாள்
கடைசியில் எண்ணச் செய்வாள்
இவளா வேண்டாம் என்றவள்?
உனக்கும் எனக்கும் இடையில்
பொய்யறு புன்னகை
சதா
சிந்திக்கொண்டேயிருக்கிறது
உன் மனதுக்கும் தெரியும்
என் மனதுக்கும் தெரியும்
நமக்குள் ஒரு
நாள்
மெய்யுறு புணர்ச்சி
நிகழத்தான் போகிறது
நமது புன்னகை
அத்தனை அர்த்தத்துடன்
உதிக்கிறது
பொருட்பெண்டிரக்
கைது செய்யும் காவலர்
அவள்
அருட்பார்வையை இரப்பர்
அய்யாவுக்குத் தெரியாமல்
நாளைக்கு இது
வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
எனக்கு
சங்கீதம் தெரியாது
பாடும் குமரியர் பாவனைகள்
எனக்குள் எழுப்பாத இசையா
கல்யாணா ரிசப்ஷன்
யார் யாரோ யார் யாரோ
வருவார்கள் போவார்கள்
வாயால் புன்னகைப்பார்கள்
பரிசென்று பாக்கெட்டுகள் குவியும்
பரும்பாலும் இஸ்திரிப் பெட்டி
மாலையில் ஜிகினா கழுத்தறுக்க
மேளசப்தம்
மண்டைக்குள் இடிக்கும்
உடம்பெல்லாம் எரியும்
உள்ளங்கை ஈரமாகும்
கால்கள் பூட்சுக்குள்
காற்றுக்காய்த் தவிக்கும்
கெடிகாரம் நகராது
அத்தனை கண்களின்
அவஸ்தை தரும் பார்வை வேறு
இத்தனைக்கும் நடுவில்
மகத்தான ஆறுதலாய்
என்னருகில், மிக அருகில்
உன்
வெள்ளை விரல் நுனியில்
மருதாணி.
- ம. பூரணி
பேருந்து.
நிறுத்தத்தில்
நிற்காமல் போகும்
பேருந்தைத்
திட்டுவதும்
எல்லா நிறுத்தத்திலும்
நின்று நின்று போகும்
பேருந்தைத்
திட்டுவதும்
பயணியர்க்கே வாய்ந்தது
பெண்கள் / ஆண்கள்
புகை பிடிக்காதீர்
படிகளில் பயணம் செய்யாதீர்
திருக்குறள்
வள்ளுவர் புகைப்படம்
ஜன்னலில் கை நீட்டாதீர்
எதையும் அறியாது
பயணம் செல்வர்
கல்லூரி மாணவர்!
நெரிசல் பேருந்தில்
தொடை இடித்து மார்பு நசுங்க
தோள் பையுடன் ஏறினாள்
அய்ந்தரை மணிப் பெண்.
அக்குள் நாற்றங்களைச் சுவாசித்து
மேல்கம்பியை ஊன்றுகோலாய்த் தாங்கி
மேடுபள்ளங்களில் குலுங்கி
வியர்வைக் குளியலில் நனைந்து
மனித மூட்டைக்குள் திணறி
பெருமூச்சோடு இறங்கி நடந்தாள்
பயணச் சீட்டின் பின்புறம் எழுதிய
மீதிச் சில்லறையை மறந்தவாறு!
அமரர் ஊர்தி விபத்து.
ஜன்னல் வ்ழியே
எட்டிப் பார்த்தது பிணம்
இன்னொரு பிணத்தை!
யாரோ எடுத்த வாந்திமேல்
மணல் தூவப்பட்டதில்
நெரிசலிலும்
காலியாகவே இருந்தது
ஓர் இருக்கை!
வார இதழ் படித்தவாறு
பயணம் போகும் பெண்ணுக்கு
எப்படித் தெரிகிறதோ,
அவள் இறங்கும் நிறுத்தம்.
ஒரே குரல்...
இடிந்து கிடக்கின்றன
மசூதிகள்...
இடிபாடுகளின்
உள்ளிருந்து
எட்டிப்பார்க்கிறான்
இறைவன்!
எரிந்து கிடக்கின்றன
தேவாலயங்கள்...
சாம்பல் குவியலில்
மெல்ல அசைகிறது
கர்த்தரின் தலை!
காயம்பட்டு கிடக்கின்றன
கோவில்கள்...
காதுகளைப் பொத்தியபடி
கண்திறந்து பார்க்கிறான்
கடவுள்!
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கும்
கூட்டத்தை நோக்கி
மூவரும் கேட்கிறார்கள்
ஒரு கேள்வி...
"உங்களில் யாராவது
ஒரு மனிதன் இருந்தால்
வரச் சொல்லுங்கள் -
ஒன்றாக நாங்கள்
உயிர்த்தெழுகிறோம்!"
- மு. மேத்தா
அமெரிக்காவில்...
அம்மா இங்கே
அசலான நெல்லூர்
அரிசி கிடைக்கிறது
டாலர் அதிகமில்லை
வடிப்பது சுலபம்
மைக்ரோவேவ் அடுப்பில்
வெந்து முடிக்க
ஐந்தே நிமிடங்கள்
கஞ்சி வடிக்கும்
கஷ்டங்கள் இல்லை
கரிப்பிசுக்கு
கல்நெல்லில்லை
ஆனால் ஏனோ
இந்திய அடுப்பில்
அழுதுகொண்டு தினமும்
அரைக் குழைசலாய்
நீ வடித்த ஐ ஆர் எட்டின்
சுவைகூட இல்லை!
- வெ. அனந்தநாராயனன்
குழந்தை
இதம் வேண்டி
என் கைகோர்த்து
உறங்கும் குழந்தையின்
கைகள்
நம்பிக்கொண்டிருக்கின்றன
கனவில் விரட்டும்
பிசாசுகளிடமிருந்தும்
புலிகளிடமிருந்தும்
காப்பாற்றித் தருவேன் என
நள்ளிரவில் துழாவும்
குழந்தைக்கு தட்டுப்படுகிறது
கசங்கிய படுக்கை விரிப்பு
காலம்
பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ பிளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்
வாழ்க்கை
தெருமுனையிலேயே
ஒதுங்கிக் கொள்வாளாம்
பெரியாயி கிழவி
வீட்டுக் கொள்ளைவரை
அனுமதித்திருந்தாள்
லட்சுமி பாட்டி
பாத்திரம் தேய்க்க
துணி துவைக்க
முற்றம் வரை
நடமாடவிட்டாள் அம்மா
வீட்டுச் சாவி தந்து
விரைகிறேன் நான்
வழிக்கு வரவைத்து
விடுகிறது
வாழ்க்கை
படிப்பு
புத்தக மூட்டை
உணவுப் பைகளெல்லாம்
வசதியாக இடம்பிடித்திருக்க
தொங்கிக்கொண்டே
செல்கின்றன குழந்தைகள்
எல்லா ஆட்டோ க்களிலும்
விபத்து
விபத்து நடந்த இடத்தை
கண நேர தாமதமின்றி
கடக்கிறேன்
பூர்வீக வீட்டை
ஒரு சொட்டு கண்ணீரின்றி
காலி செய்தேன்
குழந்தைகளின் ஆர்ப்பரிப்பை
கூச்சலென்று
புறந்தள்ளி நடக்கிறேன்
செய்திகளில் தெறிக்கும்
ரத்தம் பார்த்தும்
சாப்பாட்டைத் தொடர்கிறேன்
தெரிந்து கொண்டிருப்பீர்கள்
கண் விழித்ததும்
தொட்டிச் செடிகளுக்கு
நீரூற்றும்
சராசரி நானென்று
திருவிழா
திருவிழாவின் சந்தோஷத்தை
காற்றடைத்த பலூனாக்கி
கையசைத்தவாறே
திரும்புகிறார்கள் குழந்தைகள்
விடியலே...விடியலே!
சைதாப்பேட்ட சரோசாக்கு
கோழி கூவியும் விடியலே
சரக்கடிச்ச மச்சானுக்கு
மப்பு இன்னும் தெளியலே
சிட்டி பஸ்ஸு இடிச்சதுல
சின்னசன் காலு வெளங்கலே
இஸ்கூலு போன மக
எங்க போச்சோ திரும்பல
எவ்ளோ நேரம் காத்திருந்தும்
மெட்ரோ லாரி வரவில்லே
கட்டட வேல போனாக்க
மேஸ்திரி கண்ணு சரியில்லே
மீட்டர்வட்டி மின்னல்வட்டி
சேட்டு தொல்ல தாங்கல
ஒழச்சுக் கொட்டுற புருஷனா
சாமி கிட்ட வாங்கல
காதல் சொன்ன பால்பாண்டி
மூஞ்சி இன்னும் மறக்கலே
சைதாப்பேட்ட சரோசாக்கு
கோழி கூவியும் விடியலே.
தூங்காதே தம்பி தூங்காதே...
தொங்காதே...பஸ்ல தொங்காதே
நீ தொங்கினாலிம் ஃபிகரைப் பார்த்து மங்காதே
படிக்கட்டில் தொங்கியவன் பல்லை இழந்தான்
ஜன்னல் கம்பியில் தொங்கியவன் காலை இழந்தான்
ஃபுட் போர்டில் தொங்கியவன் கையை இழந்தான்
இப்படி பொருப்புள்ள இளைஞர்கள் சாவதினால்
நம்மை நம்பி வந்த ஃபிகரு எல்லாம் ஏங்குதப்பா!
முத்தம்
ஒரு
விளக்கேற்றுவதுதான்
முத்தம்.
ஆனால்...
விளக்கைப் போல
சட்டென்று
ஊதியணைக்க முடியாது.
கொடுக்கும் முத்தத்தைவிட
லேசானது
வாங்கும் முத்தம்
ஆனால்...
லேசாக
வாங்கிவிட முடியாது.
- பழநிபாரதி
மறதி
கற்புக்கரசி
கண்ணகி, சீதை,
நளாயினி
பெயரெல்லாம்
நினைவில் நிற்கிறது!
கற்றுக்கொடுத்த
தமிழ் ஆசிரியை
பெயர்தான்
மறந்துவிட்டது!
கால காலமாய்
காலிலே சலங்கை பூட்டி
கோவிலிலே ஆடவிட்டீர்கள்!
முதுகிலே சூடுவைத்து
அந்தப்புரத்திற்குள்
அனுப்பினீர்கள்!
உப்பில்லாத வ்ணவு கொடுத்து
மூலையிலே அமர்த்தினீர்கள்!
சந்தேகம் வந்தபோதெல்லாம்
நெருப்பிலே இறக்கினீர்கள்!
இப்போது...
வேலைக்கு அனுப்பிவிட்டு
வேவு பார்க்கிறீர்கள்!
பல்லவி
குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண்விழித்து
வீதி வீதியாய்
குடங்களோடு அலைந்தோம்...
எங்கள் துயரம் தீர்க்க
எம்.எல்.ஏ-வை தேடினோம்!
தொலைபேசியில்
எப்போது கேட்டாலும்
கிடைத்த பதில்..
"தூங்குகிறார்..."
"குளித்துக்கொண்டிருக்கிறார்"
நன்றி
பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த
அந்த தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்.
இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்...
கைப்பிள்ளையின்
கால் கொலுசை தடவியபடி!
அவதாரம்
வேலு நாச்சியாராய்
குதிரை மீது ஏறிவந்தேன்.
இராணி மஙகம்மாளாய்
வீரவாள் சுழற்றினேன்.
ஜான்சி ராணியாய்
எதிரிகளை பந்தாடினேன்.
குக்கர் சத்தம் கேட்டது
சமையலறைக்குள் ஓடினேன்!
நீ?
தந்தையை,
கணவனை,
சகோதரனை,
தன் சிறுவயது மகனை,
போர்க்களம் அனுப்பிய
புறநானூற்றின்
வீரத்தாயே...!
எல்லோரையும் அனுப்பிய
ந்ண ஏன் போகவில்லை?
ஜிலீர்...
ஆசிரியராகும் கனவு
உடைந்து நொறுங்கியது!
அரசு மது பாட்டில்களை
அடுக்கி வைக்கும் வேலையில்...
அன்பு
அன்பு
என்ற தலைப்பில்
மிகச் சிரிய
கவிதை
கேட்டார்கள்...
"அம்மா"
என்றேன் உடனே...
கேட்டது அம்மாவாக
இருந்திருந்தால்
இன்னும் சிரியதாய்
சொல்லியிருப்பேன்
"நீ"
என்று...
நினைவு
குழந்தையோடு கொஞ்சிக்
கொண்டும்
மனைவியோடு சந்தோஷமாய்
பேசிக்கொண்டிருக்கும்
மாலைப்பொழுதுகளில்
ந்னைவுக்கு வந்து
உருத்துவாள்
முதன்முதலில் பெண் பார்த்து
இன்னும் திருமணமாகாத
அந்தப் பெண்!
நான்
அம்மாவிற்கு மகனாய்
அப்பாவிற்கு வாரிசாய்
அண்ணனுக்கு அடிபணியும்
தம்பியாய்
நண்பர்களுக்கு
நன்றியுள்ளவனாய்
காதலிக்கும்போது
காதலனாய்
சிரிப்பவர்களுடன் சிரித்து
அழுபவர்களுடன் அழுது...
எப்பொழுது,
எங்கே,
எது நான்?
காத்திருந்து காத்திருந்து
சோர்கையில்
நீ வருவாய்
கோபப்படுவேன் நான்
வெட்கப்படத் தெரியாததால்...
காதல்?
இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்...
காதலையா???
அமைதி
கல் சிலைகள்
கல் விளக்குகள்
கல் சங்கிலிகள்
கல் சிற்பங்கள்
மற்றும்
கல் தூண்கள்
எப்போதும்
பேசிக் கொண்டிருக்கின்றன
கோயில்களில்
உறைந்து கிடக்கும்
கனத்த அமைதியின்
ரகசியத்தை
காதல்
தண்டவாளத்தில்
தலை சாய்த்துப்
பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்...
நீ நடந்து வருகிறாயா?
இரயிலில் வருகிறாயா?
காதல்
ஒரு விணோத நெருப்பு
அது
பற்றவைத்தால்
பற்றாது
அணைத்தால்
அணையாது...
என்ன புண்ணியமோ...
வாசலில் கையேந்தும்
குருடனைக் கடந்துபோய்
கோயில் உண்டியலில்
போடும் பணத்தால்...
வாழ்ந்து கெட்டவரின்
வீட்டை
விலை பேசி
முடிக்கும் பொழுது
கேட்கலாம்
கொல்லை புரத்தில்
ஒரு
விசும்பலை...
அடி தூளு...
காதல்
ஒரு குவாட்டர் பாட்டில்
மாதிரி
பாட்டில் ஆடாது...
ஆனால்...
அதை போட்டால்
நீ
ஆடிடுவாய்...
அம்மன்
மாரியம்மன் பண்டிகைல
கோடி வீட்டு
சாந்தி மேல
அம்மன் இறங்கி
ஆடுகையில்
என்னிடம் வந்து
கேட்டாள்
"மகனே!
என்ன வேண்டும் கேள்!!"
எப்படி
கேட்பேன்
"நீ தான்" என்று.
அந்தி
படையல் வைத்து
ந்லைத்தை வெட்டி
ஆழ்குழாய் தோண்டி
...
ஒரு நீரூற்றை அடைய
இத்தனை பிராசையா
என்று கேட்கும்
சின்னஞ் சிறு
தாவரமே!
உனக்கு எப்படி
தெரியும்
காயும் உன் சிறகுகள்
இந்த அந்தியை
எவ்வளவு
கருப்பாக்குகிறதென்று.
பூக்கள்
பூக்களை
ரசிப்பவர்கள்
அதை செடியிலே
சிரிக்க
விடுவார்கள்!!!
நான் ரசித்த கவிதைகள்
Labels:
கவிதை
Monday, May 03, 2004
மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன் !!!
மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன் !!!
Jokes from ஆனந்த விகடன்...
"'குட்டி சாமியார்'ங்கிறது சரியாத்தான் இருக்கு..."
"எப்படி?"
"'ஓம்...க்ரீம்...ஐஸ்க்ரீம்'ங்கிறாரு..."
"அந்த டாக்டர் லல்லுவோட தீவிர ரசிகரா?"
"ஆமாம்! எப்படி கண்டு பிடிச்சே?"
"பாரு...குளுக்கோஸ் பாட்டிலுக்கு பதிலா பானையை கட்டி வெச்சு ட்ரீப் ஏத்தறார்..."
பேய் 1 : "எதுக்கு இப்படி அலறியடிச்சிட்டு ஓடி ஒளியறே?"
பேய் 2 : "என் பொண்டாட்டி திடீர்னு செத்து தொலைச்சிட்டா..."
"சிறையில் இருக்கும் என் கணவனைப் பார்க்க எனக்கு அனுமதி இல்லையா...ஏன்??"
"கைதிகளை கொடுமைப்படுத்துறதா எங்க மேல புகார் வருதே..."
"மகாபாரதத்துக்கும் நம்ம பாரதத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"மகாபாரதத்துல கர்ணன் அம்மா யாருன்னு தெரியலை...நம்ம பாரதத்துல அர்ஜுன் அம்மா யாருன்னு தெரியலை..."
"மெகா சீரியலுக்கு ஒரு டாக்டரை இயக்குனராக போட்டது தப்பாயிடுச்சு"
"எப்படி?"
"சீக்கிரமா கதையை முடிச்சுட்டாரு..."
"தலைவரே! நீங்க சின்ன வீடு அதிகமா வெச்சது தப்பாயிடுச்சு"
"ஏன்! என்னாச்சு...?"
"தேர்தல் பிரசாரத்தை முடிச்சிட்டு நைட்டு பத்து மணிக்கு மேல நீங்க சின்ன வீடுகளுக்கு போனதை வீடு வீடா வோட்டுக் கேட்கப் போனதா நினைச்சு தேர்தல் கமிஷன் உங்களை கண்டிச்சிருக்கு...!"
"இன்று மாலை சரியாக ஆறு மணியளவில் 'நடமாடும் தெய்வம்' எங்கள் அண்ணன் கபாலி நம்ம தலைவருக்காக வாக்கு சேகரிக்க வருவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும்படி
அன்போடு எச்சரிக்கிறோம்"
"இந்தாப்பா கபாலி. இந்த வழியாதான் என் மாப்பிள்ளை வருவார். 'உனக்குத் தலை தீபாவளி கேக்குதா'னு சும்மா மிரட்டினா போதும். எவ்ளோ கேக்குறே?"
"அம்மா செஞ்ச பலகாரத்தைச் சாப்பிட்டுட்டு அப்புறம் போய் பட்டாசு வெடியேண்டா..."
"வேணாம்ப்பா...மயக்கத்துல வெடிச்சா காயம் பட்டுடும்...!"
"மந்திரியாரே...மாதம் மும்மாரி பொழிகிறதா?"
"பொழிகிறது அரசே! மக்கள் உங்களை 'சோமாரி...கேப்மாரி...மொள்ளமாரி...' என வசைமாரி பொழிகிறார்கள்!"
போலீஸ் 1: "கேடி கந்தசாமியை என்கெளன்ட்டர் பண்ணதுக்கு இன்ஸ்பெக்டர் ஏன் டென்ஷனாயிட்டாரு?"
போலீஸ் 2: "சும்மாவா...மாசம் பொறந்தா ஒழுங்கா மாமூல் கொடுத்துட்டிந்தானே!"
"அப்பா! நான் ஒருத்தரை மனபூர்வமா காதலிக்கிறேன்"
"பையன் என்ன பன்றான்"
"இப்பொ வயித்துல எட்டி உதைக்கிறான்"
"டாக்டர்...என் மனைவிக்கு ஆபரேஷன் முடிஞ்சுடுச்சா...இனி பிராப்ளம் ஒன்னும் இல்லையே?"
"நோ பிராப்ளம்! இனிமே நீங்க உங்க மச்சினியை தாராளமா கட்டிக்கலாம்...!"
"மன்னா! குல்பி ஐஸ்காரன் நம்ம அரண்மனை வாசலைச் சுத்தி சுத்தி வரும்போதே நினைச்சேன்...இப்படித்தான் நடக்கும்னு!"
"என்ன நடந்தது அமைச்சரே?"
"வாசல்ல கட்டியிருந்த ஆராய்ச்சிமணியை காணோம் மன்னா...!"
"இன்டர்வியூல ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்டுட்டாங்க..."
"அப்படி என்ன கேள்வி?"
"இப்ப பிரதமர் வாஜ்பாய் எந்த நாட்டுல இருக்கிறார்னு...!"
"தலைவரே! நடிகைகளை கட்சியில சேர்த்தது தப்பா போய்டுச்சு"
"ஏன்?"
"அவங்கள்லாம் தனக்கு வயசு பதினாறுன்னு சொன்னதால...'உங்களுக்கே வோட்டு இல்லை. எங்ககிட்ட வோட்டு கேக்கறீங்க?'னு மக்கள் நக்கலா கேக்குறாங்க!"
"நமது 40 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்து மக்கள் என்ன பேசிக்கிறாங்க?"
"அலிபாபாவும் 40 திருடர்களும் ஞாபகத்துக்கு வர்றதா சொல்றாங்க தலைவரே!"
"யாரை எதிர்க்கனும்...யாருக்கு சவால் விடனும்கிறதே இன்னும் நம்ம தலைவருக்கு சரியாத் தெரியல!"
"என்னாச்சு?"
"'இப்போது எங்கள் செலவை நீங்கள் கண்காணிப்பது போல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் செலவை கண்காணிப்போம்'னு தேர்தல் கமிஷனுக்குச் சவால் விட்டுக்கிட்டுருக்காரு பாரு!"
"தலைவரே! ஆனாலும் ரொம்பத்தான் ஓவரா கோல்மால் பண்ணிட்டீங்க!"
"என்ன ஆச்சு இப்போ?"
"உங்க தொகுதியில 120 சதவிகித ஓட்டுக்கள் பதிவாகியிருக்குதுன்னு மறு தேர்தல் அறிவிச்சுட்டாங்க"
"6 பந்தை போட்டா அது ஓவர்...ஒரே நேரத்துல 6 பந்தையும் போட்டா அது ரொம்ப ஓவர்..."
"தமிழ் இலக்கியத்துல ஜெயலலிதாவுக்குப் பிடிக்காதது எது தெரியுமா...?"
"இனியவை நாற்பது...!"
"அந்தபுரத்தில ஏதோ கசமுசா போல தெரியுது..."
"எப்படி சொல்ற?"
"மன்னர் ரெண்டு நாளா நேரத்தோட சபைக்கு வர்றாரே!"
"ஏண்டா கோயில்ல இருக்க சாமி கிரீடத்தை திருடினே?"
"சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்...அதான்"
மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன் !!!
Labels:
துணுக்குகள்
Subscribe to:
Posts (Atom)