தீபாவளி வாழ்த்துக்கள்
Friday, October 24, 2008
Tuesday, March 11, 2008
நான் ரசித்த Jokes - 2
"டாக்டர்! இப்ப எங்கப்பாவுக்கு எப்படி இருக்கு?"
"எதையும் இருபத்துநாலு மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்!"
"இத நான் நேத்தே கேட்டதா நெனச்சு இப்ப சொல்லுங்களேன் டாக்டர்...!"
"சே! ஏந்தான் Parking Free-ன்னு அறிவிச்சாங்கன்னே தெரியலை!"
"ஏன்?"
"பெங்களூரிலிருந்து ஒருத்தன் தினம் இங்கே வந்து பார்க் பண்ணிட்டுப் போறான்யா."
"நம்ம நாற்பது தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை பார்த்து மக்கள் என்ன பேசிக்கறாங்க?"
"அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஞாபகத்துக்கு வர்றதா சொல்றாங்க தலைவரே!"
"தலைவரோட இள வயசு போட்டோ கிடைக்காம எல்லோரும் திணறிட்டாங்க!"
"அப்புறம்?"
"போலீஸ் ஸ்டேஷன்ல எஃப்.ஐ.ஆர்.ஃபைலில் இருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு!"
"மகாபாரதத்துக்கும், நம்ம பாரதத்துக்கும் என்னங்க வித்தியாசம்?"
"மகாபாரதத்துல, கர்ணன் அம்மா யாருன்னு தெரியலை...நம்ம மகாபாரதத்துல, அர்ஜுன் அம்மா யாருன்னு தெரியலை!"
"தன்னோட வாழ்க்கை அனுபவங்களைப் புத்தகமா எழுதிய அந்த போலீஸ்காரர் ஏன் வருத்தமா இருக்கார்?"
"ஆபாசப் புத்தகம்னு சொல்லித் தடை பண்ணிட்டாங்களாம்!"
"அந்த நடிகை தன் இடுப்பாலேயே நிறைய பேரை மயக்குறாங்க..."
"அப்ப, அவங்களுக்கு 'ஹிப்'னாட்டிசம் தெரிய்ம்னு சொல்லு!"
"டாக்டரை காதலிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு..."
"ஏன்?"
"அவர் தர்ற லவ் லெட்டர மெடிக்கல் கடைக்காரர்கிட்ட கொடுத்துதான் புரிஞ்சுக்க முடியுது..."
மாணவன்: "சார்...ஒரு சந்தேகம்..."
ஆசிரியர்: "என்ன?"
மாணவன்: "வி.சி.டி-ய ஒழிச்சுட்டா, அப்புறம் ஆங்கிலத்துல இருபத்து மூணு எழுத்துதானே சார் இருக்கும்?"
"டாக்டர்! ரெண்டு கண்ணையும் மூடவே முடியல..."
"இனிமேல் அந்தக் கவலை உங்களுக்கு வேணாம்!"
ஆற்காடு வீராஸ்வாமி ஸ்பெஷல்...
"நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்"
"அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க"
"இன்னும் எங்க கிராமத்துக்கு மின்சாரமே வரலைன்னு புகார் கொடுக்கலாம்னு வந்தேன்.
ஆனால், இங்கேயும் மின்சாரம் இல்லையாமே?"
நான் ரசித்த Jokes - 2
Labels:
துணுக்குகள்
Subscribe to:
Posts (Atom)